Link copied!
Sign in / Sign up
10
Shares

புது அன்னைகள் தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்..!

பெண்கள் கர்ப்பம் தரித்து, தங்கள் தங்கக் குழந்தையை பெற்று எடுத்து தாய்மையடைந்த பின் குழந்தையே அவர்களின் உலகமாக மாறிவிடுகிறது. குழந்தையை கவனிப்பதிலேயே அவர்களின் நேரமும் வாழ்வும் கழிகிறது. புதிதாக தாய்மையடைந்த மகளிர் வெளியில் செல்லும் போதோ அல்லது குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலோ சில முக்கிய விஷயங்களை மறந்து விடுகின்றனர். அப்படி புதிய தாய்மார்கள் மறக்கும் சில விஷயங்களை  பற்றி இந்த பதிப்பில் படித்து அறிவோம்..! 

1. முக்கிய தேவை..!

பெரும்பாலுமான தாய்மார்கள் வெளியில் செல்லும் போது, குழந்தைக்கு தேவையான முக்கியமான பொருட்களை வீட்டிலேயே மறந்து வைத்து விடுவர்; மறந்துவிட்டு பின் திண்டாடுவர். முக்கியமாக, டயப்பர், நிப்பிள், குழந்தைக்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகள் அல்லது தங்களுடைய மருந்துகள் என எதையாவது மறப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர், புதிய தாய்மார்கள்..!

2. தேவையில்லை உதவி..!

குழந்தையை, குடும்பத்தை கவனப்பதில் என்னதான் தனக்கு உதவி தேவைப்பட்டாலும் அதை மற்றவரிடம் உதவி என கேட்பதை கௌரவ குறைச்சலாக எண்ணுகின்றனர், புதிய தாய்மார்கள். இதில் தவறில்லை தோழியரே! உதவி தேவைப்படுகையில் அன்னையிடமோ அல்லது மற்ற உறவுகளிடம், நண்பர்களிடம் கேட்கலாம்..!

3. அதிக ஆடம்பரம்..!

குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு என பற்பல புதிய ஆடைகள், பொம்மைகள், உணவு பொருட்கள், புத்தகங்கள் என தேவைக்கு அதிகமாக அனைத்தையும் வாங்கிக் குவிப்பர். இது வேண்டாத வேலை. எதை வாங்கினாலும் அளவாக வாங்கி பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தை நாளுக்கு நாள் வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!

4. ஒப்பிடுதல்..!

உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் தவறான விஷயம். மற்ற குழந்தை நல்ல எடையுடன் உள்ளது, என் குழந்தை இல்லை; அக்குழந்தை நல்ல நிறமாக உள்ளது, என் குழந்தை இல்லை.., என்பது போன்ற கவலைகளை தூக்கி எறியுங்கள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாமல், உங்கள் குழந்தைக்கு என்ன தேவை, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி மட்டும் சிந்தியுங்கள்..

5. உங்கள் தவறு..

நீங்கள் ஏதேனும் விஷயத்தை தவறாக செய்துவிட்டால், அது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஏற்பட்ட அசௌகரியமே குழந்தையை அழ வைத்துவிடும். குழந்தையின் அழுகையே உங்களின் தவறை சுட்டிக் காட்டும் விஷயமாக விளங்குகிறது. குழந்தைக்கு ஏற்றதையே எப்பொழுதும் செய்ய முயலுங்கள்..! குழந்தையை புரிந்து கொள்ள முயலுங்கள்..!

6. காரில் பயணம்...

குழந்தைக்கு காரில் இருக்கையை அமைக்கும் பொது 46% சதவீதத்தினர் தவறாக செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை 10 கிலோ எடையை எட்டும் வரை இதை பயன்படுத்தலாம். எவ்வாறு சரியாக கார் இருக்காய் அமைப்பது என்பதை கற்றறியுங்கள்..!

7. கேட்பதெல்லாம் பொய்..!

புதிய தாய்மார்கள், தாங்கள் என்ன கேள்வியுற்றாலும் அதனை உண்மை என நம்பி, அதை குழந்தைக்கோ தனக்கோ செய்து பார்க்க முயற்சிக்கின்றனர். குழந்தை மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மருத்துவ ஆலோசனை இன்றி எதையும் செய்யக் கூடாது என்பதை உணருங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon