Link copied!
Sign in / Sign up
3
Shares

புத்தாண்டில், குழந்தைகளுக்கான ஒரு புது உணவு..!

இன்று மலர்ந்த புது ஆண்டின் ஆரம்ப தினத்தில், உங்கள் செல்லங்களுக்கு புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்துங்கள் பெற்றோர்களே! தினம் ஒரே வகையான உணவுகளை உண்ணுவதால், குழந்தைகள் எளிதில் போர் அடைந்து விடுகின்றனர்; ஆகையால் அவர்களின் மத்தியில் துரித உணவுகளான ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் பரவி வருகிறது. எனவே, குழந்தைகளின் உணவு தாகத்தை தீர்க்கும் வகையில், சில புதிய உணவுகளை, இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்த இருக்கிறோம்..!

ஆகவே, மழலைகளுக்கு ஏற்ற மற்றும் புதிய உணவுகளை பதிப்பினை படித்து அறிய முயலுங்கள்..! இன்றைய பதிப்பில் குழந்தைகளுக்கான சுவையான மற்றும் சத்தான, செவ்வாழைப்பழ சப்பாத்தி செய்வது எப்படி என படித்தறியலாம்..!

தேவையானவை

கோதுமை மாவு - ஒரு கப், தேன் - ஒரு தேக்கரண்டி (தேனுக்கு பதிலாக கருப்பட்டியையும் சேர்த்து கொள்ளலாம்), எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு, செவ்வாழைப்பழம் - 1, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை

1. செவ்வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.

2. ஒரு பாத்திரத்தில் தேன், கோதுமை மாவு, உப்பு, மசித்த வாழைப்பழம் சேர்த்து நீர் தெளித்து சப்பாத்தி மாவு போன்ற பதத்தில் பிசைந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.

3. பிசைந்த மாவினை சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்த சப்பாத்தியை கல்லில் இட்டு, சுற்றி சிறிது எண்ணெய் - நெய் கலவை ஊற்றி, வெந்த பின் திருப்பி போட்டு எடுக்கவும்; அவ்வளவு தான் சுவையான செவ்வாழை சப்பாத்தி தயார்..!

இவ்வகை சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்; எனவே, சிறு மழலைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்றது. மேலும் சப்பாத்தியை சிறு துண்டுகளாக பிய்த்து, அதில் நறுக்கிய பழங்களை இட்டு, பால் ஊற்றி கொடுத்தால், அது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தித்திப்பான உணவாக இருக்கும்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon