Link copied!
Sign in / Sign up
2
Shares

புதிய தாய்மார்கள் செய்யும் 10 பெரிய தவறுகள்..!

தாய்மார்கள் 10 மாதங்கள் குழந்தையை பேணி பாதுகாத்து, கடும் வேதனை மற்றும் வலியைத் தங்கி, குழந்தைகளை இந்த மண்ணிற்கு அழைத்து வருகின்றனர். அப்படி பெற்றெடுத்த குழந்தைகளை வளர்ப்பதிலும் கவனித்துக் கொள்வதிலும், புதிய தாய்மார்கள் அவர்களை அறியாமலே.., தங்களை கவனித்துக் கொள்வதில் சில தவறுகளை செய்து விடுகின்றனர். அவ்வாறு புதிய அன்னைகள் செய்யும் தவறுகள் என்னவெல்லாம் என்று இப்பதிப்பில் படித்து அறியலாம்..!

1. சருமத்தின் சரிவு..!

குழந்தைகளை கவனித்துக் கொள்கிறேன் என்ற பேரில், தாய்மார்கள் தங்களை மறந்துவிடுகின்றனர். உங்கள் கணவரின் கண்களுக்கு நீங்கள் எப்படியிருந்தாலும் உலக அழகியாக இருக்கலாம்; ஆனால், உங்களின் தோற்றப் பொலிவினை மேம்படுத்த உங்கள் சருமம் மீது அக்கறை காட்டுங்கள் பெண்களே!

2. தோலின் தோல்வி..!

உங்கள் தோலில் ஈரப்பதம் இருக்கிறதா எண்ணெய்த் தன்மை இருக்கிறதா என்று பரிசோதியுங்கள் பெண்களே! இல்லாவிடில் தோலில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3. அதிகம் அழகுபடுத்துதல்..

உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளலாம்; ஆனால் அளவுக்கு அதிகமாக அழகுபடுத்தினால், அதுவே உங்களின் அழகைக் கெடுக்கும் காரணியாக மாறிவிடுகிறது. ஆகையால், அழகுபடுத்துதலில் அளவாக ஈடுபடுங்கள்; இயற்கையழகே நிலையானது என்பதை மறவாதீர்கள்.

4. கைகளில் விரிசல்..!

உங்கள் கைகள் வறண்டு போகாமல், விரிசல்கள் விழாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் இந்த மாற்றங்கள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கலாம்; குழந்தையினை ஸ்பரிசிக்கும் போது, குழந்தைக்கு உங்கள் வறண்ட கைகள் விரும்பத்தகாததாக அமையலாம் உங்கள் கணவரின் மனதில் உங்கள் அழகு குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் மற்றும் என உங்கள் கைகளின் மாற்றம் உங்கள் அன்பானவர்களின் மனதை நெருடாதவாறு கவனித்துக் கொள்ளுங்கள்..

5. பிறப்புறுப்பில் கவனம்..!

குழந்தை பிறந்துவிட்டதால், உங்கள் பிறப்புறுப்பை கவனிக்கும் எண்ணத்தை கைவிட்டு விடாமல், அவ்வப்போது அங்கு தோன்றும் முடிகளை நீக்கி, பிறப்புறுப்பு நன்கு ஆரோக்கியம் கூடிய அழகுடன் திகழுமாறு வழிவகை செய்யவும்.

6. முகத்திற்கு பரிவு..!

அடிக்கடி உங்கள் முகத்தைக் கழுவுங்கள்; குழந்தையின் தேவைகளை கவனிப்பதில் உங்களை மறவாதீர்கள். அடிக்கடி முகம் கழுவுவதால் உங்கள் முகம் பொலிவுடன் விளங்கும்.

7. பாதங்களின் பாதகம்..

உங்கள் பாதங்களில் விரிசல்கள் மற்றும் குதிகால் வெடிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டிய வழிமுறைகளைக் கையாண்டு உங்கள் அழகினை மேம்படுத்தி, அழகினை பராமரியுங்கள்.

8. மேக்கப் கிட்..!!

வெளியில் செல்லும் போது, சூரிய ஒளியால் குலையும் உங்கள் அழகினை மேம்படுத்த மேக்கப் கிட்டினை உடன் எடுத்துச் செல்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

9. உடற்பயிற்சியினை உணராமை..!

தினமும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயலுங்கள்; இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீங்கள் என்றும் பதினாறாக தோன்றவும் உதவும்.

10. தண்ணீரினை தவிர்த்தல்..

தினமும் அதிக தண்ணீர் அருந்துங்கள்; ஏனெனில் தண்ணீரே உடற்செயலிய மாற்றத்தின் ஆதாரம் மற்றும் உங்கள் அழகிற்கு அடிப்படையாக விளங்குவதும் தண்ணீர் என்பதை மறவாதீர். ஆகையால், தினம் 3 லிட்டர் தண்ணீர் அருந்தி உடல் அழகினை பராமரியுங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon