Link copied!
Sign in / Sign up
16
Shares

புதிதாக அம்மாவானவர்கள் மாமியாரிடம் விட்டு கொடுத்து போக வேண்டிய 6 விஷயங்கள்!

தாய்மையடையும் தருணங்கள் அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பொது அனைத்தும் சரியாகவே இருக்கும். நீங்களும், உங்கள் துணையும் உங்கள் குழந்தையை வளர்பதற்காக பெற்றோராக பெருமளவில் மாறி இருப்பீர்கள். நீங்கள் என்னதான் சரியாய் செய்தலும், உங்கள் மாமியாரை திருப்தி படுத்தவே முடியாது. இதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? அல்லது நன் அதை வித்தியாசமாக செய்தேன் அல்லது நீ உன் கணவரின் சகோதரியிடம் கற்று கொள்ள வேண்டும், எப்படி நல்ல அம்மாவாக இருக்க வேண்டும் என்பதை. இது போல உங்கள் காதில் இரத்தம் வரும் வரை கூறி முடிப்பார்கள். உங்கள் மாமியாரோடு நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் சந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

1 மோதல்கள்

நிச்சயமாக மோதல்கள் ஏற்படும். அவர் வயதில் மூத்தவர் மற்றும் நிறைய அனுபவமிக்கவர், நீங்கள் அவரது கருத்துக்களை மதிக்க வேண்டும். தொடர்ச்சியாக உங்களை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுவது, உங்களை மட்டம் தட்டி பேசுவது என உங்களை வெறுப்படைய செய்வார்கள். இது உங்களை முட்டாளாக பாவிக்கவும், உங்களுக்கு அங்கிருந்து ஓட வேண்டும் என்பதை போலவும் இருக்கும்.

2 குறுக்கீடுகள்

ஒருவேளை அது உங்கள் முதல் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அவர்களது தலையீடு அதிகமாகவே இருக்கும். அவர்களை பொறுத்தவரை அனுபவமே அவர்களை நல்ல அம்மாவாக மாற்றியுள்ளது. ஆம், அது உண்மைதான். ஆனால் இதுதான் உங்கள் முதல் குழந்தை தவறுகளில் இருந்தே நீங்கள் அனுபவத்தை பெறுவீர்கள். அவர்களின் வார்த்தைகளையே நீங்கள் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதை சரி செய்ய வேண்டுமெனில் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுங்கள். அவர்களுடைய உதவியை பாராட்டுவதோடு மேலும் உதவிகள் தேவைப்படும்போது கேட்பதகவும் கூறுங்கள்.

3 குடும்ப பழக்கவழக்கங்கள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களுக்கென தனி பழக்கவழக்கங்களும்,பாரம்பரியமும் இருக்கும். நீங்கள் வளர்ந்த முறையும் உங்கள் கணவர் வளர்ந்த முறையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதனால் மோதல்கள் வராது ஆனால் உங்களை தவறாக புரிந்துகொள்ள நேரிடலாம். எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்களுடன் கலந்தாலோசித்து அதன்படி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

4 அம்மா பிள்ளை

இது நாம் அனைவரும் சந்திக்க கூடிய ஒன்று. உங்களது கணவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருக்காமல், அவரின் அம்மாவின் வார்த்தைகளை சரி என்று ஒப்புக்கொண்டு அவருடன் சென்றுவிடுவார். கடைசியில் எல்லா கணவர்களும் அவர்களின் தாய்க்கு மகனாக மாறிவிடுவார்கள், இதில் நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் என்னதான் கடினமாக முயற்சித்தாலும், நீங்கள் அவரின் அம்மாவை போல் சிறந்தவர் அல்ல என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். நீங்கள் எங்கே இருந்தாலும், அவர்கள் அம்மாவுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டேதான் இருப்பார்கள். இது உங்களை கோவப்படுத்தினாலும், நீங்கள் அதை நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டும்.

5 தனிமையின்மை

எல்லா நேரங்களிலும் உங்கள் மாமியார் உடன் இருப்பது, உங்கள் தனிப்பட்ட நேரத்தில் ஒரு ஊடுருவலாக இருக்கலாம். இப்போது நீங்கள் ஒரு அம்மாவாக இருப்பதால், உங்கள் துணையுடன் போதுமான நேரம் கூட செலவிட முடியாது. கடுமையான வேலைகளுக்கு இடையிலும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்க முயற்சித்து கொண்டிருப்பீர்கள். அந்த சிறிது நேரத்திலும் உங்கள் மாமியாரின் தலையீடு இருக்கும் பட்சத்தில் அது உங்களை வெறுப்படைய செய்யும்.

6 தொடர்ச்சியான ஒப்பீடுகள்

உங்கள் கணவரின் சகோதரிகளுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் எப்போதும் உங்களையே ஒப்பீட்டு கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத்தான் குழந்தை வளர்ப்பை பற்றி தெரிவது போலவும் உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போல் மட்டம் தட்டி கொண்டே இருப்பார்கள். சிறிய விஷயங்களுக்கு கூட அவர்களின் அறிவுரை படியே நடக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதை நீங்கள் சற்று வித்தியாசமாகத்தான் சமாளிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசினால் நீங்கள் தவறானவர்போல தெரிவீர்கள்.

இது போன்ற சின்ன சின்ன நெருடல்கள் குடும்ப உறவில் வருவது சகஜமான ஒன்று. முடிந்த வரை விட்டு கொடுத்து, உறவினுள் விரிசல் விழுவதை தவிர்த்திடுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon