Link copied!
Sign in / Sign up
6
Shares

ஆரோக்கியத்தை தரும் முளைக்கட்டிய பயிறு குழம்பு செய்வது எப்படி?

முளைக்கட்டிய பச்சை பயிரில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் குழம்பு தான் இந்த முளைக்கட்டிய பயிறு குழம்பு ஆகும். எப்போதுமே தானிய வகைகள் என்பது மிகவும் சத்துக்கள் அடங்கிய ஒன்றாக விளங்கும். அதுவும் இந்த முளைக்கட்டிய பயிறு குழம்பு எல்லா மாத கர்ப்பிணிகளும் சாப்பிட ஏதுவாக அமைய, 12 முதல் 24 மாத குழந்தைகள் மற்றும் 24 முதல் 36 மாத குழந்தைகளுக்கும் நீங்கள் கொடுத்து அவர்களை ஆரோக்கியமாக வளர்க்கலாம். இந்த முளைக்கட்டிய பயிறு குழம்பில் குறைந்த கலோரியும், அதிகமான புரதமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

தக்காளி - 1

முளைக்கட்டிய பயிர் - 1 கப்

தேங்காய்ப்பால் - 1 கப்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

குழம்பு தூள் - 2 அல்லது 3 ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை நேரம் - 10 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும்.

2. பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

4. அதன்பிறகு தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.

5. தக்காளி மசிந்ததும்., அதில் மஞ்சள் தூள், குழம்பு தூள், தனியா தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை மீண்டும் வதக்கி கொள்ள வேண்டும். 

6. அதில் முளைக்கட்டிய பயிரை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடிப்போட்டு வேக விட வேண்டும். 

7. பயிர் வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

8. கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடான முளைக்கட்டிய பயிறு குழம்பு ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon