Link copied!
Sign in / Sign up
0
Shares

புது அன்னைகளுக்கான அழகான ஸ்டைலான 5 ஆடைகள்..!

பிரசவம் முடிந்து, குழந்தையை பெற்று, அவர்களை வளர்ப்பதிலேயே தன் முழு நேரத்தையும் செலவிட்டு,தன்னையே மறந்து வாழும் புதிய தாய்மார்களே! உங்களையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். தாயாகிவிட்டதால், உங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம். இனிதான் நீங்கள் சாதிக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. உங்கள் குழந்தையின் பார்வையில் சாதாரண இல்லத்தரசியாய் காட்சியளிப்பதும், சாதனை பெண்ணாய் காட்சியளிப்பதும் உங்கள் கையிலே! தாயான பின்னும் அழகான தோற்றத்துடன், அர்த்தமுள்ள வாழ்க்கையுடன் விளங்க 5 ஆடை குறிப்புகள், இந்த பதிப்பில் அளிக்கப்பட்டுள்ளன. படித்து அழகாகவும்..!

1. Cape Gilet

Cape Gilet போன்ற மேலாடை வகைகளை பயன்படுத்துவதால், இளமையான தோற்றம் பெறலாம். மேலும் இந்த ஆடைகள் மதிக்கத்தக்க தோற்றத்தை அளிக்கும். குழந்தையை கவனிக்கவும் ஏற்றதே!

2. துப்பட்டாக்கள்..

நீங்கள் சுடிதார் அல்லது டாப் பாண்ட் ஆடைகள், பாவாடை சட்டை என எதை அணிந்தாலும், அதிக நிறங்கள் கொண்ட மல்டி கலர் துப்பட்டாக்களை பயன்படுத்துங்கள். ஏனெனில், தாயான பின் துப்பட்டா அணிந்து செல்வது, உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும்; மேலும் இது பாதுகாப்பாகவும், அழகாகவும் இருக்கும்.

3. பாவாடைகள்..

ஸ்டைலான, அழகான பாவாடைகளை அதற்கு ஏற்ற மேலாடை மற்றும் ஆபரணங்களுடன் அணிந்தால், அட்டகாசமாக இருக்கும். இது அழகான மதிக்கத்தக்க தோற்றத்தை தரும். இது அனைத்து விதமான வேலைகள் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும். குழந்தை கவனிப்பில், தொந்தரவு இல்லாது, ஏதுவாக இருக்கும்.

4. குர்தாக்கள்..!

பெண்களே! அனைவரும் குர்தாக்கள் அணிந்திருப்பீர்; இதில் என்ன அழகு, ஸ்டைல் என்று கேட்கிறீரா? எல்லாமே அணியும் விதத்தில் உள்ளது. குர்தாக்களை பல நிறங்களில், பொருந்தாத பாண்ட்டுடன் அணிந்தால், நன்றாக இருக்குமா?

குர்தாக்களை அதற்கேற்ற ஜீன்ஸ் பாண்ட் அல்லது லெக்கிங் உடன் அணிய வேண்டும். இது இளமையான தோற்றத்தை தரும். மேலும் வேலைகளை கையாள, தொந்தரவில்லாமல் உதவியாக இருக்கும்.

5. சட்டைகள்..

ஜீன்ஸ் அல்லது பார்மல் பாண்ட்களுடன், பார்மல் சட்டை அணிந்து செல்வது அலுவலகத்திற்கு ஏற்றது. இது மதிப்புமிக்க தோற்றத்தை தரும். மேலும் இது பலவித வேலைகள் செய்வதற்கும், இடையூறு இல்லாமல் வசதியாக இருக்கும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon