Link copied!
Sign in / Sign up
3
Shares

புதிதாய் பிறக்கப்போகும் சிசுவை வரவேற்க பெற்றோர் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..!

கர்ப்பம் தரித்த நொடி முதல், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் நினைவிலேயே ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து, கழிக்கிறாள் கர்ப்பிணி. அப்படி தனக்கு பிறந்து, தன் இல்லத்திற்கு வருகை தரப்போகும் புத்தம் புதிய புத்துயிரை வரவேற்க, சிசுவின் பெற்றோர் சிலபல விஷயங்களை செய்தல் அவசியம்..! அவ்வகையில் புதிதாய் பிறக்கப்போகும், உங்கள் குழந்தையை வரவேற்க நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்களை குறித்து இந்த பதிப்பில் படித்தறியுங்கள், தோழியரே!

1. சுத்தமான இல்லம்..

குழந்தை பிறந்து வாழ்ந்து வளரப்போகும் இடமான இல்லத்தை, குழந்தை இருக்கப்போகும் அறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் மிகவும் குறைவாக இருக்கும்; எனவே, குழந்தை இருக்கப்போகும் இடத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்..!

2. உணவு..

குழந்தை பிறந்தபின் அதற்கு தேவையான உணவுகள் மற்றும் தாயார் உண்ண வேண்டிய உணவுகள் என எல்லாம் தயாராய் வீட்டில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. அன்னைக்கு தேவையான பொருட்கள்..

பிரசவம் நடக்கும் சமயம், அதற்கு பின் அன்னைக்கு தேவைப்படும் மிக முக்கியமான, அத்யாவசிய பொருட்களை எல்லாம் வாங்கி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால், கடைசி நிமிட பதற்றங்கள் எல்லாம் குறையும்.

4. வாங்க வேண்டியவை..

குழந்தை பிறந்த பின் அதற்கு தேவைப்படும் பொருட்கள், ஆடைகள், விளையாட்டு சாமான்கள் என குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருத்தல் அவசியம்.

5. தாய்ப்பால் சுரக்க..!

குழந்தை பிறந்த அந்த நொடி முதல் குழந்தையின் 6 மாத கால வயது வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். எனவே, குழந்தைக்கு அளிக்க வேண்டிய தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும் அத்தனை உணவுகளையும் அன்னை உண்டு வருதல் அவசியம்..! இது குழந்தைக்கு அதிக நலன் பயக்கும்; மேலும் அன்னையின் உடல் நலத்தை முன்னேற்றவும் இவ்வுணவுகள் உதவும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon