Link copied!
Sign in / Sign up
3
Shares

புதிதாய் பிறந்த குழந்தை அழுவதற்கான 6 காரணங்கள்...

புதிதாக பெற்றோர்கள் ஆனவர்களால் எளிதில் புறக்கணிக்க முடியாத ஒன்று குழந்தைகளின் அழுகையாகும். பெரும்பாலும் குழந்தைகள் உங்களுடன் தொடர்புகொள்ள அழுகையை பயன்படுத்துவார்கள். ஆனால், அவர்கள் அழுவதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் கடினமானது. குழந்தைகள் அழுவதற்கான பொதுவான 6 காரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. பசி

பொதுவாக குழந்தைகள் அழுவதற்கான காரணம் இதுவாகும். குழந்தைக்கு எவ்வளவு ஊட்ட வேண்டுமென்று உங்களால் அறிய முடியாது அவர்கள் உங்களை தள்ளியவுடன் ஊட்டுவதை நிறுத்தி விடுவீர்கள். குழந்தைக்கு எப்பொழுது பசியெடுக்கும் என்று உங்களால் யூகிக்க இயலாது. அவர்களின் அழுகை பசிக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

2. மாற்றுவதற்கு

உங்களின் வருகைக்கு காத்திராமல் அவர்களின் டயபர்களை மாற்ற நினைப்பார்கள், அதை உங்களுக்கு தெரியப்படுத்த அழுவார்கள். சில குழந்தைகள் சிறிதளவு ஈரத்தை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் அழ தொடங்கிவிடுவார்கள். குழந்தையை சுகாதாரமாக பராமரிக்க அடிக்கடி டயபர்களை மாற்றுங்கள்.

3. கவன ஈர்ப்பு

குழந்தைகள் எப்பொழுதும் பெற்றோர்கள் தங்கள் பக்கத்திலேயே இருக்க விரும்புவார்கள். அவர்களை எப்பொழுதும் தூக்கிவைத்திருக்க வேண்டும். உங்களின் உடல் உஷ்ணமும், இதயத்துடிப்பும் அவர்களை உற்சாகமடைய செய்யும். எனவே அவர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு உங்கள் வேலையை செய்வது அவர்களின் அழுகையை குறைக்கும் சிறந்த வழியாக இருக்கும்.

4, களைப்பு

குழந்தைகள் நாள் முழுவதும் படுத்திருப்பதால் சோர்வடையலாம், ஆனால் குழந்தைகளை அழுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இது என்பது அபத்தமானதாக தோன்றலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அதீத கவனிப்பு அவர்களை சோர்வடைய செய்யலாம். ஏனென்றால் அவர்கள் சிறியவர்கள் நமக்கு இருக்கும் அளவிற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்காது.

5. குளிர்ச்சி/சூடு

குளிப்பாட்டுவதற்கு உடையை கழட்டும்போதெல்லாம் உங்கள் குழந்தை அழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம், அவர்களின் சருமம் வெளிப்புற குளிரை தாங்கமுடியாத அளவுக்கு மிருதுவானது. அதேபோல் அதிகளவு உடைகளை அணிவிக்கும்போதும் அழுவார்கள், அதன் காரணம் உஷ்னம் அதிகமாக இருக்கும். அவர்கள் வசதியாக உணரவில்லை என்பதன் அர்த்தம்தான் இந்த அழுகை.

6. பல்முளைத்தல்

உங்கள் குழந்தை வளர்ந்தவுடன், தற்காலிகப் பற்கள் அவர்களின் சிறிய ஈறுகளில் இருந்து வளர தொடங்கும்.

இது மிகவும் வலி நிறைந்ததாகும் அதன் விளைவு அழுகையாகும். ஈர துணியால் ஈறுகளில் ஒத்தடம் கொடுப்பது ஆறுதல் அளிக்கும் 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon