Link copied!
Sign in / Sign up
6
Shares

புதிதாய் அம்மாவானவர்களின் 5 குழப்பங்கள்

புதிதாக அம்மாவானவர்களுக்கு மனதில் பலவிதமான எண்ணங்கள் இருக்கும், ஆனால் உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. அவை குழப்பமாகவோ, ஏன் பைத்தியக்காரதனமாகவோ கூட இருக்கலாம்.

புதிய அம்மாக்களின் இந்த 5 எண்ணங்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

1. எதிர்பார்ப்பது

குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது

உண்மை:

குழந்தையை சாப்பிட எண்ணுவார்கள்

இது மனிதக்கறி உண்பதல்ல. உங்கள் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். நீங்களே அவர்களுடன் விளையாடி, சிரிக்க வைத்து அவர்களின் அழகான வயிறை தடவி பார்ப்பீர்கள். இப்படி செய்யும்போது அவர்களின் அழகு உங்களுக்கு அவர்களை உணவுபோல் காட்டும். இதனால்தான் அவர்களை உணவென்று அழைக்கிறார்கள். உங்கள் நண்பர்களும், உறவினர்களும் உங்கள் குழந்தையின் ஆப்பிளை எடுத்துக்கொள்கிறேன் என்று கிண்டலடிப்பார்கள். அவர்கள் ஆப்பிள் என்று சொன்னது உங்கள் குழந்தையின் கன்னத்தைதான்.

2. எதிர்பார்ப்பது

டயபர் மாற்றுவது எளிதானது

உண்மை:

டயபர் மாற்றுவது மிகவும் வெறுக்கத்தக்கது

குளிப்பாட்டி முடித்தவுடன் டயபர் மாற்றினால் போதுமென்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், ஒரு நாளைக்கு 12 முறைகூட மாற்ற நேரிடலாம். தினமும் அதிக டயபர்களை மாற்றுவது ஒரு இமாலய வேலையாகும். தினமும் சமைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளுடன் இதனையும் செய்வது மிகவும் கடினமாகும் .ஒரு பொது கழிவறையில் சுத்தமான டயபரை தவறவிட்டால் உங்களின் ஆன்மாவே அழ தொடங்கிவிடும்.

அது மட்டுமின்றி டயபர்களின் பக்க விளைவுகளும் உங்களை கவலையடைய செய்யும். எனவே சரியான தயாரிப்புகளை பார்த்து வாங்கவேண்டும்.

3. எதிர்பார்ப்பது

உங்கள் குழந்தையின் நலன் சரியாக நிர்வகிக்கப்படுவதற்கு எல்லா விதமான ஆராய்ச்சிகளையும் செய்வீர்கள்.

உண்மை:

உங்கள் குழந்தையை நிர்வகிக்கத் தயாராகவில்லை.

உங்கள் குழந்தையை கையில் வைத்து இருக்கும் போது படியில் விழுவது போலவோ, நெருப்பு சூழ்ந்த பகுதியில் இருப்பது போன்றோ அல்லது வேறு எதாவது ஆபத்தான இடத்தில இருப்பது போன்றோ எண்ணி பாருங்கள். நீங்கள் எப்போதும் அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவீர்கள் குறிப்பாக அவர்கள் உங்களைவிட்டு தூரத்தில் இருக்கும்போது மிகவும் பயப்படுவீர்கள். சில சமயங்களில் மனிதர்களை பார்த்தே நீங்கள் பயப்படுவீர்கள். குறிப்பாக குழந்தைகளை பார்க்க வருபவர்களை பார்த்து மிகவும் அஞ்சுவீர்கள்.

பின் குழந்தையுடன் எதிர்ப்பாராத விதமாக கதவில் இடித்து விட்டால் குழந்தையின் மூளையே பாதிக்கப்பட்டது போல் பதட்டப்படுவீர்கள். குழந்தை மருத்துவரை அழைக்கும்போது நீங்கள் அமைதியாக இருப்பீர்கள், நீங்கள் எவ்வளவு கொடூரமாக இருக்கிறார்களென்று மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.

4. எதிர்பார்ப்பது

உங்களுக்கு அன்பான கணவரும் அழகான குடும்பமும் உள்ளது

உண்மை:

ஏன் இவர்களெல்லாம் வாழ்க்கையில் உள்ளார்கள்?

குழந்தையின் பாதுகாப்பு என்று வரும்போது குடும்ப உறுப்பினர்களையே நம்பமாட்டீர்கள். உங்கள் கணவர் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அவர்களை நம்பமாட்டீர்கள். அவர்களையெல்லாம் விட்டு நீங்களும் உங்கள் குழந்தையும் தனியாக போகவேண்டுமென நினைப்பீர்கள். இறுதியாக, குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு முன்னரே நீங்கள் அவர்களை நம்ப தொடங்குவீர்கள்.

5. எதிர்பார்ப்பது

நீங்கள்தான் சிறந்த அம்மாக்கள்

உண்மை:

நீங்கள் செய்யும் அனைத்துமே தவறானதுதான்

நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதில் , உணவு ஊட்டுவதில், டயபர் மாற்றுவதில் என அனைத்திலும் மோசமானவர்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் சிறந்த தாயாக கனவு காண்கிறீர்கள். குறைந்தபட்சம் உங்கள் பிள்ளை உங்கள் தவறுகளை நினைவில் வைத்திருக்க கூடாது என்று வேண்டி கொள்ளுங்கள். ஒரே நாளில் நீங்கள் 8 முறை பாலை தரையில் சிந்தலாம்.ஆனால், நீங்கள் அதனை சரிசெய்து கொள்வீர்கள். ஆனால், அடுத்த குழந்தைக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று மகிழ்ச்சியடையுங்கள்.

நீங்கள் மட்டும்தான் அனைத்து தவறுகளையும் செய்பவர்கள் என்ற உங்களின் எண்ணம் இப்போது மாறியிருக்கும் என நம்புகிறோம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon