Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ அட்டவணை...

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மனதில் பல வித புதிய கேள்விகளும் குழப்பங்களும் எழுவது வழக்கம் தான். பல தாய்மார்களும், தன் வாழ்வில் புதியதோர் மாற்றத்தை சந்திப்பதாக இந்த கர்ப்ப காலத்தில் சொல்வது வழக்கம். கர்ப்பிணி பெண்கள் தன் வாழ்வில் சந்திக்கும் அழகிய தருணங்களில் ஒன்றாக அமைவது தன் குழந்தையின் முதல் சத்தத்தை கருவில் கேட்டு மிகவும் மகிழ்வது தான். உங்களுடைய மருத்துவர் உங்கள் உடல் நலத்தையும், குழந்தையின் உடல் நலத்தையும் கண்காணிக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவையும் பரிந்துரை செய்வார்கள். எப்போது நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டும்? என்ன காரணங்களுக்காகவெல்லாம் செல்லலாம் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

ஆரோக்கியமான கர்ப்பத்துக்கான அட்டவணை:

உங்கள் கர்ப்பம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் நீங்கள் ஒரு சில காலக்கட்டத்தில் கண்டிப்பாக மருத்துவமனைக்கு மறக்காமல் செல்ல வேண்டியது அவசியமாகிறது.

4 முதல் 28 வாரங்கள்: மாதம் 1 முறை செல்ல வேண்டும்.

28 முதல் 36 வாரங்கள்: 2 வாரத்துக்கு 1 முறை செல்ல வேண்டும்.

36 முதல் 40 வாரங்கள்: ஒவ்வொரு வாரமும் 1 முறை செல்ல வேண்டும்.

நீங்கள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பின், மருத்துவர் பரிந்துரை செய்யும்போது கண்டிப்பாக பரிசோதனைக்கு செல்ல வேண்டியது அவசியம். கர்ப்பத்தின் போது மருத்துவமனைக்கு செல்வது அம்மா மற்றும் பிள்ளை இருவருக்கும் உடல் மற்றும் மனதளவில் மாற்றத்தை தருகிறது. குழந்தையின் உடல் எடை என்பதை கருத்தில் கொண்டு மறக்காமல் மருத்துவமனை நீங்கள் செல்ல வேண்டும். ஒருசில கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமற்று இருக்கக்கூடும். இந்த நிலையை மருத்துவர்கள் முன்பே அறிந்துக்கொள்வதால் தேவையான முன் கவனிப்பின் மூலம் குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனைக்கு எப்போது அதிகம் செல்ல வேண்டும்:

1. வயது 35 மற்றும் அதை தாண்டியவர்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவர்கள் அடிக்கடி உங்களை வர சொல்வார்கள். இதற்கு காரணம், 35 வயதை தாண்டிய குழந்தைக்கு பிறப்பில் குறைபாடு இருப்பது அதிகம் காண வாய்ப்பிருக்கிறது.

2. கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை., ஆஸ்துமா, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்... போன்ற பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் அடிக்கடி உங்களை வர பரிந்துரை செய்வார்.

3. ஒரு சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தின் போது உடல் நல குறைவு என்பது அடிக்கடி ஏற்படக்கூடும். அப்படி இருந்தால் குழந்தையின் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. அதனால், தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்வதோடு, அடிக்கடி பரிசோதனைக்கு வரவும் சொல்வார்கள்.

4. குறைப்பிரசவ பிரச்சனை காணப்பட வாய்ப்பிருந்தால், உங்களை மருத்துவர்கள் அடிக்கடி வர சொல்வார்கள்.

கர்ப்பிணிகளே! சுற்றி இருப்பவர்கள் எழுப்பும் கேள்வி, பதிலால் நீங்கள் குழப்பம் கொண்ட மன நிலையுடன் காணப்படுவதற்கு பதிலாக மருத்துவரை அணுகி அவர் மூலமாக உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்வது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon