Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பிணிகள் கூச்சமின்றி செய்ய ஆசைப்படும் 7 விஷயங்கள்...

கர்ப்பிணிகள் பிறக்க போகும் குழந்தையை நினைத்து ஆனந்தம் கொண்டாலும், அவர்கள் அன்றாட நாட்களில் பல வித சிரமங்களை அனுபவிக்கின்றனர். கொஞ்ச நாட்களில் பொது இடங்களுக்கு செல்வதற்கு கூச்சம் கொள்ள தொடங்கும் கர்ப்பிணிகள், அதன் பிறகு அந்த நினைப்பை மனதை விட்டு நீக்குகின்றனர். காரணம், அவர்கள் உடல் மற்றும் மனதளவில் பலவித மாற்றங்கள் நிரம்ப காணப்படும் காரணத்தால் தான். இப்போது கூச்சத்தை தவிர்த்து சவுகரியத்தை கர்ப்பிணிகள் ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் 7 விஷயங்கள் என்ன என நாம் பார்க்கலாம்.

1. உடை விஷயம்:

பொதுவாக கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பல வித உடல் மாறுதல்களை கர்ப்பிணிகள் சந்திக்க, உடை விஷயத்தில் மிகவும் மறுப்பு மனப்பான்மையுடன் காணப்படுவர். அவர்கள் வயிறு உப்ப, மிகவும் இலகுவான ஆடை அணியவே ஆசைப்படுவர். அதையும் தாண்டி நீச்சல் உடையில் இருந்தால் நன்றாக இருக்கும் எனும் எண்ணம் கூட கர்ப்பிணிகள் மனதில் ஏற்படுகிறது.

2. வலி உணர்வு:

பொதுவாக கர்ப்பிணிகளின் 5 மாதங்களுக்கு பிறகு ஒரு வித உள்ளுணர்வுடன் காணப்படுவர். இப்போதே தன் குழந்தையை பார்க்க மாட்டோமா என அவர்கள் ஏங்க, அதற்கு காரணம் அவர்கள் அனுபவிக்கும் வலியும் தான். அந்த உணர்வானது அவர்கள் மனதில் தானாகவே தோன்றிவிடுகிறது.

3. மருத்துவ முறை:

குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதிக்க, தாயின் உடல் நலத்தையும் மிகவும் கவனமாக கையாள, அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை என அனைத்தும் அடுக்கி வைக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் கடந்து எப்போது மீளுவோம் என்ற மனநிலையும் கர்ப்பிணிகளுக்கு இதனால் ஏற்படுகிறது.

4. புதிய நபர் அறிவுரை:

கர்ப்பிணிகளுக்கு வந்து செல்வோரெல்லாம் அறிவுரை கூறுவது வழக்கமாக அமைய, அதனால் அவர்கள் தெரிந்த நபர்களைக்கூட புதிதாக சில சமயத்தில் பார்க்க செய்கின்றனர். இது போன்ற அறிவுரைகளை முதலில் விரும்பும் அவர்கள், ஒருக்கட்டத்தில் ஏன் கேட்டோம் என யோசிக்கவும் செய்கின்றனர். இதற்கு காரணம், ஒருவர் சொல்லும் அறிவுரை என்பது உண்மையை ஒத்து இல்லாமல் போவதாலே ஆகும்.

5. தனிமையை விரும்புவர்:

அவர்கள் குழந்தைகள், துணை, சொந்தங்கள் மற்றும் குடும்பத்தை விட்டு தனிமையையே பெரும்பாலும் விரும்புவர். வயிற்றில் வளரும் நம் குழந்தை இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் எனும் நினைப்பே அவர்களிடம் இருக்கக்கூடும்.

6. உணவு முறை:

இதுவரை சில சத்தான உணவைக்கூட தவிர்த்த அவர்கள், தன் கருவில் வளரும் குழந்தைக்காக இந்த முறை ஏற்றுக்கொள்வர்.

7. விலகி இருத்தல்:

ஏதேனும் சண்டை அல்லது சச்சரவை கண்டால் உடனே அவ்விடத்தை விட்டு முதல் வேலையாக நகர ஆசைப்படுவர். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon