கர்ப்பிணிகள் இறுக்கமான உடை அணியலாமா?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றுள் ஒன்று தான் உடை பராமரிப்பு முறை. நீங்கள் அணியும் ஆடைகள் மிகவும் இறுக்கமாக இருந்தால் அது குழந்தையை பாதிக்குமா எனும் சந்தேகம் ஒரு சிலருக்கு வரலாம்? இறுக்கமான ஆடைகளால் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், உங்களுக்கு அசவுகரியத்தை கண்டிப்பாக இதனால் ஏற்படுத்தும் என்பதே உண்மை.
குழந்தையை நீங்கள் பெற்றுக்கொள்ளும் முன்னே பல முறை உடல் மாறுதலை காணக்கூடும். ஒரு நாள் நீங்கள் அணியும் ஆடை சவுகரியத்தை தர, அடுத்த நாள் அசவுகரியத்தை தரவும் கூடும். கர்ப்பிணிகள் ஏற்கனவே பலவித வலியையும், தசைப்பிடிப்பையும் சந்திக்க ஆடைகள் அதனை மேலும் மோசமான நிலைக்கு தள்ளக்கூடும். இதனால் இரத்த அழுத்தம் என்பது சீரற்று காணப்படுகிறது.

இறுக்கமான ஆடை அணிவதால் என்ன ஆகும்?
நாம் முன்பு கண்டதைபோல் இறுக்கமான ஆடை குழந்தையை பாதிப்பதில்லை. ஆனால், கவனிக்கக்கூடிய பிரச்சனைகளை இதனால் கர்ப்பிணிகள் சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் இடுப்பை சுற்றி இறுக்கமாக ஆடை அணிவதால் நெஞ்செரிச்சல் என்பது ஏற்படக்கூடும். இந்த நெஞ்செரிச்சல் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை என்றாலும், அதன் தாக்கத்தை மேலும் மோசமடைய செய்ய இறுக்கமான ஆடைகள் அமைகிறது.

வலி ஏற்படுமா?
கர்ப்பிணி பெண்கள் தளர்வான ஆடை அணிவது தேவையற்ற வலியை தவிர்க்கும். நீங்கள் அணியும் ஆடை இறுக்கமாக இருக்குமெனில் வயிற்றுப்பகுதி, நெஞ்சை சுற்றி மற்றும் முதுகு பகுதியில் வலி என்பது காணப்படும். இதற்கு காரணமாக இருக்கும் ஒன்று, நீங்கள் அணியும் பிரா தான். பெண்களின் பிரா அளவானது சரிசெய்யக்கூடிய அமைப்பு கொண்டதாய் அமைவது நல்லது. இதனால் அளவை உங்களால் சரி செய்துக்கொள்ள இயலும். சரியான அளவில் நீங்கள் அணியும் பிரா இல்லாமல் இருந்தால், தேவையற்ற அழுத்தமானது மார்பு பகுதியில் உருவாகிறது. இதனால் தாய்ப்பால் தரும்போதும் பிரச்சனைகள் உண்டாகக்கூடும். இதன் இறுதி நிலை முலையழற்சி ஏற்படுவதாகும்.

இரத்த ஓட்ட பிரச்சனையா?
கர்ப்ப காலத்தின் முதல் நிலையில் இரத்த நாளங்கள் சரியான அளவில் இரத்தத்தை தர தயாராகிறது. நீங்கள் கை மற்றும் கால் இறுக ஆடை அணிவதால் இரத்த ஓட்டம் என்பது சீரற்று காணப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ஆடைகள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி நீங்கள் அணிந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பதட்டம் என்பது குறைகிறது.
நீங்கள் கர்ப்பமாக இருந்தபோது ஆடையினால் எத்தகைய இன்னலை அடைந்தீர்கள்? எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.

