Link copied!
Sign in / Sign up
7
Shares

பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என சொல்லும் மார்பக அளவு

பெண்கள் பிறக்க போகும் குழந்தையைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலுடன் இருக்க, அதற்கு ஏற்ப அவர்கள் பல்வேறு யோசனையுடனும் சில சமயத்தில் இருப்பர். குழந்தையின் பின்புறம் கொண்டு பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறியும் முடியும் என்கின்றனர். ஆம், கருவில் இருக்கும் குழந்தையின் பின்புறம் அகலமாக இருக்க, தாயின் வயிற்றை முட்டிக்கொண்டும் இருக்கும். அப்படி எனில் பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறதாம்.

ஆனால் தற்போது குழந்தையின் பின்புறம் கொண்டு பாலினத்தை தெரிந்துகொள்வதை விட, அம்மாக்களின் மார்பக அளவை கொண்டு பிறக்க போவது ஆணா? இல்லை பெண்ணா? என தெரிந்துக்கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.

மார்பகம் எப்படி இருக்கும்?

உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் என்றால் உங்கள் மார்பகம் வழக்கத்தை விட பெரிதாக இருக்குமாம். பெண் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கும் தாய்மார்களின் மார்பகம் 8 சென்டிமீட்டர் அதிகரிப்பதாகவும், அதுவே ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் பெண்களுக்கு மார்பக அளவு 6.3 சென்டிமீட்டர் இருக்குமெனவும் கூறப்படுகிறது. 

எதனால் இந்த வித்தியாசம்?

அதாவது வயிற்றில் ஆண் குழந்தை வளர, இதனால் டெஸ்டோஸ்டிரோன் அளவானது குறைவாக சுரக்க பெண்களின் மார்பகமும் இதனால் சிறிதாக இருக்கிறது.

ஒரு ஆணும், பெண்ணும் கொள்ளும் உடலுறவின் மூலமாக பெண்கள் 'X' குரோமசோமை வெளியிட, ஆண்கள் 'X' அல்லது 'Y' குரோமசோமை வெளியிடுகின்றனர். அதனால், அப்பாக்களிடமிருந்து 'Y' குரோமசோம் கிடைத்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தையாகவும் ஒருவேளை 'X' குரோமசோமாக இருந்தால் பிறக்கப்போவது பெண் குழந்தையாகவும் இருக்கக்கூடும். 

100 சதவிகிதம் எப்படி தெரிந்துக்கொள்வது?

அம்னோடிக் திரவ பரிசோதனை மூலமாக பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை துல்லியமாக தெரிந்துக்கொள்ள முடியும். இந்த சோதனையில் 100 சதவிகித முடிவுகள் கிடைத்தாலும் இதனால் கருச்சிதைவு உண்டாக அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த முறை என்பது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த முறையில் ஊசியை அம்மாவின் வயிற்றில் கருப்பை சுவர் நோக்கி செலுத்துவர். இதனால் பனிக்குடம் லேசாக துளையிட அம்னோடிக் அமிலம் 20 மில்லி அளவும் உங்கள் வயிற்றிலிருந்து பரிசோதனைக்கு எடுக்கப்படும். 

இது மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு வழியாகும்.

என்ன செய்வது?

இன்றைய காலகட்டத்தில் அல்ட்ரா சவுண்ட் மூலம் முடிவை தெரிந்துக்கொள்கின்றனர். ஆனாலும் உங்கள் கர்ப்பம் 18 வாரத்தை எட்டாமல் இதுவும் சிறந்த முடிவை தருவதில்லை.

எந்த குழந்தையாக இருந்தால் என்ன? தயவுசெய்து எதிர்ப்பார்ப்புகளை விடுத்து பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக மட்டுமே பிறக்க வேண்டும் என பிரார்த்தித்து மன அமைதியுடன் இருங்கள். அது தான் வாழ்க்கையில் கடைசிவரை இனிமையை தரக்கூடிய ஒரு விஷயமாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon