Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பிணி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி - இளநீர்..!!!

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது. இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும், தாது உப்புக்களும், உயிர்சத்தும், மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து இதில் உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும், இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது.

இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால், இது கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள்(எலக்ரோலைட்) அதிகமாக உள்ளதால், இது உங்கள் நாவறட்சியில் இருந்தும், உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது. இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில், இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது; இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon