Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை அடிப்பது சரியா?

கர்ப்பம் என வந்துவிட்டால் கேள்விகளும் மனதில் எழ தொடங்கிவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்க, கர்ப்பிணி பெண்களின் மனதில் எழும் கேள்விகளுள் ஒன்று தான் இந்த ஹேர் கலரிங்க் பிரச்சனை. ஒரு சில பெண்கள் தன் முடியை கருமையாக வைத்துக்கொள்ள விரும்பி டை அடிப்பது உண்டு. மற்ற நேரத்தில் கவலைப்படவில்லை என்றாலும், கர்ப்பமாக இருக்கும்போது இது சரிதானா? எனும் குழப்பம் அவர்கள் மனதில் எழும். அந்த சந்தேகத்தை தீர்க்க தான் இந்த பதிவு.

கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை அடிக்கலாமா?

முதலில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால்... இந்த ஹேர் டையில் இருக்கும் நச்சின் அளவு என்பது குறைவானதே. நீங்கள் ஹேர் டை அடிக்கும்போது சருமமானது கொஞ்சமாகவே உள் இழுத்துக்கொள்கிறது. இந்த குறைந்த அளவு என்பது கருவில் இருக்கும் குழந்தையை எதுவும் செய்துவிடுவதில்லை. தாய்ப்பால் தரும்போதும் இதே நிலை தான். 

இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி ஹேர் டை அடிக்க தயக்கம் கொண்டால், அதற்கு மாற்று வழியை தேர்வு செய்வது மிக நல்லது. நீங்கள் ஹேர் டையை ஒரு இடத்தில் பயன்படுத்தி முடி உதிர்வதை கண்டால், உச்சந்தலையில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

என்ன தீர்வு?

காய்கறிகளால் ஆன ஹேர் டையை பயன்படுத்த முயலலாம். ஓர் உதாரணத்திற்கு மருதாணி இலையை சொல்லலாம். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. உங்களுடைய மருத்துவரின் பரிந்துரையில் ஒரு சிலர் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதத்தில் பயன்படுத்த சொல்வார்கள். 

கூந்தலை பாதுகாக்க என்ன வழி?

1. இரண்டாவது மூன்று மாதம் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

2. நீங்கள் உபயோகப்படுத்த விரும்பும் இடம், காற்றோட்டமான இடமாக இருத்தல் வேண்டும்.

3. நீங்கள் ஹேர் டை அடித்தாலும் நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.

4. நீங்கள் ஹேர் டை அடிக்கும்போது கையில் உறை அணிய வேண்டியது அவசியம்.

5. உங்கள் தலையில் தடவும் முன்பு, சருமத்தின் சிறிய பகுதியில் அலெர்ஜி சோதனை செய்து பார்க்க வேண்டும்.

6. கண் மை இடுதல் போன்றவற்றை குறைத்து கொள்ளுங்கள். கண்களின் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon