Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்ப காலத்தில் ஓட்ஸ் சாப்பிடுவது சரியா?

கர்ப்ப காலத்தில் பலவித அறிவுரைகள் கிடைக்கப்பட, அவற்றில் மிகவும் முக்கியமானது எதை நாம் சாப்பிட வேண்டும்? எனும் அறிவுரை தான். அதிலும் இதை சாப்பிடு, அதை சாப்பிடாதே என குழப்ப இதனால் எதனை சாப்பிட வேண்டும் எனும் குழப்பம் கவலையையும் சேர்த்து தருகிறது. சரியான உணவு முறையுடன் கூடிய ஆரோக்கியமான உணவு என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமானது. 

கர்ப்பிணிகள் ஓட்ஸ் சாப்பிட பலரும் பரிந்துரை செய்ய, இது உண்மையிலேயே ஆரோக்கியம் தானா? இதனால் என்ன நன்மை என ஒருசிலர் கேட்கவும் செய்வர். இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு.

கர்ப்ப காலத்தில் ஓட்ஸ் சாப்பிடலாமா?

கர்ப்பிணிகளுக்கு ஓட்ஸ் என்பது பலவித நன்மையை தருகிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய தலைசிறந்த 12 உணவுகளில் ஓட்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து என்பது ஓட்ஸில் அதிகமிருப்பதாக அமெரிக்க கர்ப்பிணிகள் சங்கம் தெரிவிக்கிறது.

மற்ற முழுதானியங்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஓட்ஸ் என்பதும். இந்த ஓட்ஸ் நமக்கு தேவையான ஆற்றலை தர, அதில் கார்போஹைட்ரேட்டும் அடங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து என்பது கர்ப்பிணிகளுக்கு தேவையான செரிமானத்தை தருகிறது.

மேலும் இந்த ஓட்ஸில் பல  தாதுக்களான பொட்டாசியம், இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. அதாவது கால் கப் ஓட்ஸில் 4 கிராம் செரிமானத்திற்கான நார்ச்சத்தும், 27 கிராம் கார்போஹைட்ரேட்டும், 73 கிராம் பொட்டாசியமும், 150 கலோரியும் இருக்கிறது.

மேலும் ஓட்ஸில் அதிகளவில் செலினியம், வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி1 ஆகியவையும் இருக்கிறது. இந்த தாதுக்கள் தேவையான எதிர்ப்பு சக்தி தர, எலும்பு மற்றும் பல்லையும் வலுப்படுத்துகிறது. இதனால் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி என்பது சிறந்த நிலையில் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஓட்ஸ் தினமும் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு உதவ, தேவையான சத்துக்களையும் சேர்த்து தருகிறது. 

ஓட்ஸை சேர்த்துக்கொள்வது எப்படி?

1. கேக்கிற்கு தேவைப்படும் மைதாவில் ஒரு பங்கை ஓட்ஸாக நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

2. ஓட்ஸை அப்பம், பிரெட் போன்றவற்றிலும் நீங்கள் சேர்த்து சாப்பிடலாம்.

3. வீட்டில் தயாரிக்கும் பிஸ்கட்டை நில அல்லது சாதாரண ஓட்ஸுடன் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம்.

4. காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக்கொள்ள, கொஞ்சம் பாலுடன் ஓட்ஸை சேர்த்து கொதிக்க வைத்து நறுக்கிய பழத்தை சேர்த்தும் சாப்பிடலாம்.

5. பொதுவான உணவுகளான அப்பம், க்ரனோலா பார் முதலிய பல உணவில் ஓட்ஸ் சேர்ந்திருப்பதை காணலாம். இவை அனைத்தும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்.

6. காரமாக சாப்பிட விரும்பினால், ஓட்ஸை சமைத்து அத்துடன் காய்கறி, சிக்கன் ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon