Link copied!
Sign in / Sign up
2
Shares

அடுத்த 3 தலைமுறையை வெறுக்க செய்யும் கர்ப்ப கால தவறுகள்...

கர்ப்பம் எனும் சாலை வழியில் பள்ளம், மேடு காண்பது சகஜம் தான். எனினும், கர்ப்ப காலத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் ஒரு சில பழக்கவழக்கங்கள் அடுத்த மூன்று தலைமுறையை வெறுக்க செய்கிறது என்பதை நீங்கள் அறிவீரா? ஆம், அது என்ன என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. சாப்பிடும் பழக்கம்:

கர்ப்பிணிகள் எப்போதும் சத்தான உணவையே சாப்பிட வேண்டும். நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டிய உணவை வேகவைத்து சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், ஒரு சில உணவை சாதாரண நம் உடல் இதுவரை ஏற்றுக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்து செயல்படுவது நல்லது. இல்லையேல், அது பிறக்க போகும் உங்கள் குழந்தையை பாதிக்கக்கூடும்.

2. புகை மற்றும் மது பழக்கம்:

இது பொதுவாக தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆம், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கங்கள் கருச்சிதைவுக்கு காரணமாக அமைகிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு என்பது பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டால் அதன்பிறகு தங்களுடைய உடல் விஷயத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அப்போது தான் கருத்தரித்து குழந்தை பிறப்பதில் சிக்கல் என்பது காணப்படாமல் இருக்கிறது. இந்த பழக்கம் என்பது அடுத்த மூன்று தலைமுறையை பாதிக்குமெனவும் ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

3. மன இறுக்கம்:

"தாயை போல பிள்ளை..." என்பது பழமொழி. ஆம், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்கள் குழந்தையும் பிறக்கும். பொதுவாக கர்ப்பிணிகளின் இரத்த அழுத்தம் என்பது வழக்கத்தைவிட வித்தியாசமாக காணப்படும். எனவே, அவர்கள் எடுத்தெறிந்து பேசும் குணத்தை திடீரென பெற, அவர்கள் மனம் நினைத்தால் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளவும் முடிகிறது. இல்லையேல், நாளை உங்கள் மகனும் எதையாவது எடுத்தெறிந்து பேச அதிக வாய்ப்பிருக்கிறது.

இதனால் என்ன ஆகும்?

1. பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைப்பாட்டுடன் காணப்படக்கூடும்.

2. உடல் எடை குறைவுடன் குழந்தை பிறக்கக்கூடும்.

3. எல்லா விஷயங்களுக்கும் அதிகம் உணர்ச்சி வசப்படுவர்.

4. மனதளவில் மாற்றம் கண்டு, சமூகத்துடன் ஒன்றி வாழ முடியாத நிலை ஏற்படும்.

5. குணாதிசயங்கள் மாற்றம் நிரம்ப காணப்படும்.

கர்ப்பிணிகளே! உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டும் போதாது. அவர்கள் எதிர்காலத்தில் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி தர வேண்டியது மிகவும் அவசியம். அமைதி, பொறுமை, பணிவு, சிரிப்பு இவற்றையெல்லாம் அவர்களுக்கு கருவிலிருக்கும்போதே உணர கற்றுக்கொடுங்கள். அது தான் அவர்கள் வாழ்வை செழிப்பாக மாற்றும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon