Link copied!
Sign in / Sign up
10
Shares

பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை

பெண்கள் எப்போதும் அழகிற்கும், சுத்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். என்னதான் இயற்கையாகவே அவர்கள் அழகாக இருந்தாலும், அவர்கள் மற்றவர்களை கண்டு ஏங்குவார்கள், மாறவும் முயற்சிப்பார்கள். அதே போல் பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர். அதை அவர்கள் பெரிதாக கருதுவதில்லை. ஆனால் அவை மற்றவர்களுக்கு பெரிதாக படும். அவை என்னவென்று பார்க்கலாம்.  

1 பொதுவாக பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று அனைவருக்குமே தெரியும். அதற்காக அவர்கள் எங்கு கண்ணாடியைப் பார்த்தாலும், உடனே தங்கள் அழகை பார்த்து இரசிப்பது, சரிசெய்வது என்று செய்வார்கள். பொது இடங்களில் இத்தகைய செயலை மற்றவர்கள் பார்க்கும் போது, அது சரியான நகைச்சுவையாகத் தான் இருக்கும்.

2 சில பெண்கள் உடுத்தும் உடைகளை வீட்டிலேயே சரியாக அணிந்து கொண்டு வராமல் இருப்பார்கள். அரைகுறை ஆடை அணிந்திருப்பார்கள். இதனால் உள்ளாடையானது வெளியே அடிக்கடி தெரியும். அவ்வாறு தெரியும் படி உடை உடுத்தியிருப்பதோடு, அதனை அடிக்கடி சரிசெய்வதால், அத்தகைய செயல் நிச்சயம் ஆண்களின் பார்வையை தூண்டிவிடும். பெண்கள் ஒழுங்காக இருந்தால், நிச்சயம் ஆண்களும் ஒழுங்காக இருப்பார்கள்.

3 சில பெண்கள் சரும பராமரிப்பு என்று அடிக்கடி அலங்காரம்(make-up) செய்வார்கள். அதற்காக ஒரு சிறிய அலங்கார அறையையே( make-up room) கைகளில், கைப்பை (hand-bag) என்ற பெயரில் வைத்து கொண்டு சுற்றுவார்கள். மேலும் கொஞ்சம் வியர்த்துவிட்டாலும், பொது இடம் என்று கூட பார்க்காமல், அந்த இடத்திலேயே சிலர் அலங்காரம் செய்ய துவங்கிவிடுவார்கள். இதை மற்றவர்கள் பார்த்தால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப் பாருங்கள்.

4 சில பெண்கள் சிறிய ஆடைகளை அணிவார்கள். அவ்வாறு உடுத்தியிருக்கும் ஆடை சிறியதாக, குட்டையாக இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் பொது இடங்களில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். அவர்களுக்கு யார் எப்படி பார்ப்பார்கள் என்று தெரிந்தும் செய்கிறார்கள். இது மற்றவர்கள் பார்வையில் எவ்வளவு கேவலமானதாக தோன்றும்.

5 பொது இடங்களில் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் பேசுவது. பெண்கள் அமைதி, பொறுமை என்று தான் தோன்றும். ஆனால், சில பெண்கள் சாலைகளில், பேருந்துகளில் சற்று உணர்ச்சவசப்பட்டால், யார் இருக்கிறார்கள் என்று சிறிதும் பராமல், பேசுகின்றனர்.

6 தளர்வான ஆடைகளை அணிந்து கொண்டு, பூங்காக்களில் உடற்பயிற்சி செய்கிறார்கள். அப்படி செய்யும் பொது மற்றவர்களின் பார்வை எப்படி அவர்கள் மீது விழுகிறது என்பதையும் கவனிக்க தவறி விடுகிறார்கள்.

என்னதான் நவநாகரிக வளர்ச்சி என்று மாறினாலும், நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்காவிட்டாலும், குறைத்தது அவற்றை கெடுக்காமலாவது இருக்கலாம். நாகரீகத்தின் வளர்ச்சி என்னும் பெயரில் சில பெண்கள் செய்யும் இத்தகைய செய்கையால் எல்லா பெண்களின் மீதும் தவறான எண்ணம் ஏற்படுகிறது. எனவே பெண்கள் இத்தகைய செய்கைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. பெண்மை போற்றும் விதமாக பூமியுடன் ஒப்பிடுகிறார்கள். ஆறுகளுக்கு பெண்களின் பெயர் சூட்டுகிறார்கள். ஏன் கடவுளாக வணங்கவும் செய்யும் நம் நாட்டில், இப்படி கலாச்சார சீரழிவுகளை தவிர்க்க முயற்சியுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon