Link copied!
Sign in / Sign up
0
Shares

பாப் கார்ன் எனப்படும் சோளப்பொரி வீட்டில் தயாரிக்க எளிய செய்முறை - வீடியோ

குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி என்றாலே அலாதி பிரியம் தான். அதிலும் பாப் கார்ன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். திரைப்படங்களுக்கு அழைத்து சென்றால், இடைவெளியில் அவர்களின் தேர்வாக இருப்பது பாப் கார்னும், ஐஸ் கிரீமுமே. இவ்வளவு ஏன் பெரியவர்களாலும் பாப் கார்ன் எப்போதும் விரும்பப் படுகிறது. எதை வாங்கினாலும் நம் பெரும் கவலையாக இருப்பது அவற்றின் தயாரிப்பு முறை. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தாயாரித்திருப்பார்களா என்பதே நம்மை குழப்பமடைய செய்யும். இங்கு வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எப்படி பாப் கார்ன் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 சிறிய கார்ன் (மக்கா சோளம்) - 150 கிராம்

2 நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு

3 மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

4 உப்பு - 1½ தேக்கரண்டி

5 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

6 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

1 அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய்யை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.

2 150 கிராம் கார்னை அதனுடன் சேர்த்து கிளறி விடவும். சிறிது நேரத்திற்கு பின் குக்கரை அதன் முடியால் மூடவும். விசில் போடக் கூடாது.

3 கார்ன் வெடிக்கும் சப்தம் அதிகமாக கேட்கும் போது, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

4 பொரியும் சப்தம் குறைந்த உடன் அடுப்பை அணைக்கவும். பாப் கார்ன் தயார்.

இதை கவலையும், குழப்பமும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமோ என கவலைப்பட தேவையில்லை.

Video Credits : Amma Samayal

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon