இன்றைய காலகட்டத்தில் நமது உணவு முறை வெகுவாக மாறி வருகிறது. குழந்தைகளும் அதற்கு தகுந்தாற்போல உணவு பழக்கவழக்கங்களில் மாறுபடுகிறார்கள். அவர்கள் வீட்டில் செய்யும் திண்பண்டங்களை விட, கடைகளில் கிடைக்கும் பிஸ்ஸா மற்றும் பர்க்கர் போன்றவற்றிற்கு மாறி வருகிறார்கள். இவற்றை தவிர்க்க நாம் தயாரிக்கும் உணவு பொருட்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றாலே வெறுப்புதான், அதிலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பூசணிக்காயை பிடிக்கவே செய்யாது. அவர்களுக்காக தான் பூசணிக்காய் பஜ்ஜி. இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
சோளமாவு - 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பூசணிக்காய் - 1
செய்முறை
1 ) மஞ்சள் நிற பூசணிக்காயை தோல் சீவி, பஜ்ஜி போடுவதற்கு ஏற்ற வடிவில் நறுக்கி கொள்ளவும்.
2 ) பின் பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வரமிளகாய் தூள், உப்பு மற்றும் இட்லி மாவு சிறிது சேர்த்து, அதனுடன் சூடான எண்ணையையும் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து, பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
3 ) பின் வெட்டி வைத்த பூசணி துண்டுகளை இந்த கலவையில் போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும். சுவையான பூசணிக்காய் பஜ்ஜி ரெடி.
பூசணிக்காய் வறுவல்
1 ) பூசணிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மிளகாய் தூள் தடவி சிறிது நேரம் காயவைக்கவும். பின் அவற்றை எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான பூசணிக்காய் ப்ரை ரெடி!
குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைத்த நாம் நாட்டு காய்கறிகளை புதுமையாய் கொடுக்க முயற்சிக்கலாம்!
