Link copied!
Sign in / Sign up
7
Shares

பூக்கோசு (ப்ரோக்கோலி) எனும் கர்ப்பிணிகளின் பத்து மாத காவலன்

பூக்கோசு என்பது பார்ப்பதற்கு முட்டைக்கோசு போலவே இருக்கக்கூடிய ஒரு காய்கறி வகையாகும். ஆனால், காலிஃபிளவர் தான் பூக்கோசு என பலரும் நினைக்கின்றனர். உண்மை என்னவெனில் காலிஃபிளவர் என்பது வேறு. பூக்கோசு, காலிஃபிளவர். முட்டைக்கோசு...எல்லாமே ஒரே வகையை சார்ந்த காய்கறிகள் தான். இவற்றுள் பூக்கோசு என்பது பலவித சத்துக்களை கொண்ட ஒன்றாகும். எனினும், கர்ப்பிணிகளுக்கு எப்படி உதவுகிறது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பூக்கோசுவின் பத்து பயன்கள் (கர்ப்பிணிகளுக்காக)
1. மலச்சிக்கலை போக்கும்:

மலச்சிக்கல் என்பது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுச்சிக்கல் தான். உங்கள் வயிற்றில் ஏற்படும் மாற்றத்தால் ஹார்மோன்களில் மாற்றம், வளர்சிதை மாற்றம், இரும்பு சத்து குறைபாடு முதலியவன உண்டாகக்கூடும். இந்த பூக்கோசுவில் கரையும், கரையா நார்சத்து இருப்பதால் தேவையான நீர் சத்தை தந்து மலச்சிக்கலை போக்குகிறது.

2. இரத்த சோகையை கட்டுப்படுத்தும்:

கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது மிகவும் அவசியம். இரும்பு சத்து குறைபாடால் இரத்த சோகை என்பது ஒருவருக்கு ஏற்படுகிறது. பூக்கோசுவில் பெருமளவில் இரும்பு சத்தும், போலிக் அமிலமும் இருப்பதால் இரத்த சோகை என்பது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

3. ரத்த சர்க்கரை அளவை சரி செய்யும்:

கர்ப்ப நீரிழிவு என்பது கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக வரத்துடிக்கும் ஒன்று தான். அதாவது போதிய இன்சுலின் என்பது உங்கள் உடலில் உற்பத்தி ஆகாததால் இந்த பிரச்சனை என்பது வருகிறது. பூக்கோசு சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவானது சரியாக இருத்தல்கூடும்.

4. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று என்பது ஏற்படாமல் இருக்க எதிர்ப்பு சக்தி என்பது அவசியம். பூக்கோசுவில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் செலினியம் அளவால் தேவையான எதிர்ப்பு சக்தி என்பது உங்களுக்கு கிடைக்கிறது.

5. எலும்பு வலுவடையும்:

கர்ப்பிணிகளுக்கு எலும்பின் வலுக்குறைவால் எலும்பு புரை பிரச்சனை ஏற்படக்கூடும். பூக்கோசுவில் தேவையான சத்துக்கள் இருப்பதால் எலும்பு ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். மேலும் பூக்கோசுவில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகமும் இருக்கிறது.

6. சருமத்தை பாதுகாக்கும்:

இந்த பூக்கோசுவில் வைட்டமின் ஏ, ஈ, பி, கே முதலியவை இருப்பதால் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. ஆகவே, பூக்கோசுவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள சருமம் பளபளப்பதோடு, பாதுகாப்புடனும் இருக்கக்கூடும்.

7. கண் பார்வை தெளிவு:

பூக்கோசுவில் பீட்டா கரோட்டின் இருப்பதால் தேவையான எதிர்ப்பு சக்தி என்பது கிடைக்கிறது. இதனால் கண் பார்வை தெளிவடையும்.

8. புற்றுநோய் வராது:

பூக்கோசுவில் பைத்தோகெமிக்கல்கள் இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் பண்பு இதற்கு உண்டு. இதனால் உங்களுக்கும், உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான எதிர்ப்பு சக்தி என்பது கிடைக்கிறது.

9. குழந்தை பிறப்பு பிரச்சனை நீங்கும்:

நீங்கள் குறைவான சத்துள்ள உணவை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் குழந்தை பிறக்கும்போது பலவித அசவுகரியத்தை அடையக்கூடும். அதனால் பூக்கோசு சாப்பிடுவதன் மூலம்... பிறக்கும் உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

10. கரு வளர்ச்சிக்கு உதவும்:

பூக்கோசுவில் வைட்டமின் சி, கே, போலேட், துத்தநாகம், கால்சியம், இரும்பு சத்து இருப்பதால்... கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பூக்கோசுவை எப்படி பார்த்து வாங்குவது?

1. சுத்தமான, கச்சிதமான, பிரகாசமான கரும் பச்சை அல்லது ஊதா - பச்சை நிறத்தை பூக்கோசுவின் தலைப்பகுதி கொண்டிருக்கும்.

2. அழகிய தண்டுகள் இருக்க வேண்டும். வெறுமனே இருப்பதை (தண்டுகள் அற்று) வாங்க வேண்டாம்.

3. மஞ்சள் நிற தலைக்கொண்ட பூக்கோசுவை வாங்க வேண்டாம். அவை முற்றிய வகையை சார்ந்தது.

4. பூக்கள் காய்ந்திருந்தால் வாங்க வேண்டாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon