Link copied!
Sign in / Sign up
15
Shares

பொங்கலன்று விதவிதமாய் வித்தியாசமாய் பொரியல் செய்வது எப்படி?

பொங்கல் தமிழர்களுக்கு சிறப்பான பண்டிகை. அன்று கடவுளுக்கு படையலிட இரு வகை பொங்கல், பல விதமான காய்களுடன் குழம்பு மற்றும் பொரியல்களை செய்வார்கள். சுவை பார்த்து செய்த உணவுகளை விட, பொங்கலன்று சுவை பார்க்காமல் சமைக்கும் உணவு கூட அற்புதமாக இருக்கும். இங்கு, பொங்கலன்று செய்ய விதவிதமாய் வித்தியாசமாய் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1 வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 1

தண்ணீர் - 3 குவளை

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ¼ தேக்கரண்டி

செய்முறை

1 வாழைக்காயைத் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2 நறுக்கிய துண்டுகளை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து கொள்ளவும்.

3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

4 பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

5 பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த வாழைக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறினால், வாழைக்காய் பொரியல் தயார்.

2 அவரைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 300 கிராம்

தண்ணீர் - 3

சின்ன வெங்காயம் - 9

காய்ந்த மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ¼ தேக்கரண்டி

செய்முறை

1 அவரைக்காயின் முனை மற்றும் ஓரப் பகுதியை நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

2 ஒரு பாத்திரத்தில் 3 குவளை தண்ணீரை எடுத்து, அதில் அவரைக்காய் மற்றும் உப்பு போட்டு வேகவிடவும்.

3 அவரைக்காய் வெந்ததும், தண்ணீரை வடித்து விடவும். பின் அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறிய துண்டுகளாக கிள்ளிக் கொள்ளவும்.

5 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

6 வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அவரைக்காய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறினால் அவரைக்காய் பொரியல் தயார்.

3 சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 200 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ¼ தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

1 சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவி தோலுடன் வட்டமாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

2 ஒரு பாத்திரத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு தனியாக எடுத்து கொள்ளவும்.

3 பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்னர் வேகவைத்த கிழங்கைச் சேர்த்துக் கிளறினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல் தயார்.

4 மொச்சை கூட்டு

தேவையான பொருட்கள்

மொச்சை - 200 கிராம்

துவரம்பருப்பு - 75 கிராம்

தண்ணீர் - 1 குவளை

மஞ்சள்தூள் - சிறிதளவு

சின்னவெங்காயம் - 6

சாம்பார் பொடி - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

சீரகம் - ¼ தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ¼ தேக்கரண்டி

செய்முறை

1 துவரம்பருப்பை தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும். பின் அதனுடன் ஒரு குவளை தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

2 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.

3 பருப்பு அரை பதத்திற்கு வெந்ததும் மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

4 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

5 பின், அதனுடன் வேகவைத்த கலவை சேர்த்து வேகவிடவும். கடைசியாக அதனுடன், தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறினால் மொச்சை கூட்டு தயார்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon