Link copied!
Sign in / Sign up
2
Shares

பொங்கல் போட்டியில் வெற்றி பெற போவது யார்? - சூர்யாவா? விக்ரமா?

பொங்கலுக்கு சிறப்பு சேர்க்க்கும் விஷயங்கள் என்னவென்று பார்த்தால், இரண்டு வகையான பொங்கல், இனிமையான கரும்பு, நாள் முழுக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவைகளோடு சிறப்பு சேர்க்கும் இன்னொரு விஷயம் புதிதாக திரைக்கு வரும் படங்கள் தான். தொடர்ந்து விடுமுறை வாரத்தில் பெரிய நடிகர் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய படங்களை பொங்கலுக்கு வெளியிட ஆர்வம் காட்டுவார்கள். இந்த வருடம் தல தளபதி பொங்களுக்கு இல்லை என்றாலும் சூர்யாவும், விக்ரமும் அவர்களின் இடத்தை நிரப்ப இந்த பொங்கலுக்கு தங்களுடைய படங்களை நம்மிடம் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய படம் மட்டுமில்லாமல், மேலும் சில படங்களும் இந்த பொங்கலுக்கு வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் அவைகளுடைய என்னவென்று இங்கு பார்க்கலாம்.

1 தானா சேர்ந்த கூட்டம்

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், நானும் ரவுடி தான் ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில், சூர்யா,கார்த்திக், கீர்த்தி சுரேஷ், செந்தில், கலையரசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையக்கிறார். இது சொடக்கு மேல சொடக்கு போடுது எனும் பாடல் வெற்றி பாடலாக மாறியிருக்கிறது. இது பொங்கல் திருநாட்களில் நாம் கண்டு கழிக்க திரைக்கு வருகிறது.

2 ஸ்கெட்ச்

இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீஸர் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விக்ரமின் இந்த படமும் பொங்கல் திருநாட்களில் நாம் கண்டு கழிக்க காத்திருக்கிறது.

3 குலேபகாவலி

குலேபகாவலி கதை சொல்ல போறோம் படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா, ஹன்ஷிகா, ரேவதி, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. குலேபகாவலி 1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட திரைப்படம். இப்படத்தின் தலைப்பை தான் தற்போது பிரபு தேவா நடித்திருக்கும் படம் கைப்பற்றியுள்ளது. இது பொங்கல் திருநாட்களில் நம்மை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.

4 மதுரை வீரன்

‘சகாப்தம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கியவர் சண்முகபாண்டியன். இவர் 2008ஆம் ஆண்டிலிருந்து கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சகுனி, ஒரு ஊரிலே ரெண்டு ராஜா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பி.ஜி.முத்தையா அறிமுக இயக்குனராக இயக்கும் மதுரை வீரன் படத்தில் நடித்துள்ளார். சண்முகப்பாண்டியன், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி கதாநாயகியாக அறிமுகமாகிறார். வி.ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படமும் பொங்கல் திருநாளன்று பல கருத்துக்களோடு நமக்காக காத்திருக்கிறது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon