Link copied!
Sign in / Sign up
11
Shares

பொங்கல் கோலம் வித்தியாசமாய் இருக்க - அருமையான குறிப்புகள்

பொதுவாகவே பெண்களுக்கு கோலமிடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். பெண்களுக்கு கோலமிடுவது பிடித்தாலும், தினசரி வாழ்வின் வேலைப்பளு காரணமாக எளிதான கோலமொன்றை போட்டுவிடுவார்கள்.

மார்கழி மாதம் வந்ததும் அவர்கள் வாசலில் விதவிதமாய் கோலமிட துவங்கி, பொங்கல் வரை வண்ணமயமாய் கோலமிடுவார்கள். ஒவ்வொருவரும். ஒவ்வொரு விதமாய் கோலமிட்டு வண்ணம் தீட்டுவார்கள். பின் பசுவின் சாணத்தில் பூசணிப்பூவை சொருகி வைத்திருப்பார்கள். இந்த சமயத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலும் ரம்மியமாய் காட்சியளிக்கும். இங்கு பொங்கல் கோலம் வித்தியாசமாய் இருக்க உதவும் அருமையான குறிப்புகளை பார்க்கலாம்.

1 மணல்

ஆற்று மணலை சல்லடையில் சலித்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் வண்ணக் கோலப்பொடியை கலந்து கோலமிட்டால் ஒரே சீராக பரவி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

2 கல் உப்பு

மணல் கிடைக்காதவர்கள், வீட்டில் இருக்கும் கல் உப்புடன் வண்ணக் கோலப்பொடியை கலந்து கோலம் போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும், வெயில் பார்ப்பதற்கு மினுமினுப்பாக காட்சியளிக்கும்.

3 தேங்காய்

பெரும்பாலும் வீட்டில் தேங்காய் பால் செய்வோம். பின் அதன் சக்கையை குப்பையில் எறிவோம். ஆனால், அவற்றை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்து, வண்ண கோலப்பொடி சேர்த்து கோலமிட்டால் மிக அழகாக இருக்கும்.

4 கரும்பு

கரும்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதை சாப்பிட்ட பின் சக்கையை காய வைத்து அரைத்து, அதிலும் வண்ணக் கோலப்பொடியை கலந்து பயன்படுத்தலாம்.

5 பிரட்

வீட்டில் மிதமாகி காய்ந்து போகும் பிரட் துண்டுகளை தூக்கி எரியாமல் உலர்த்தி, அவற்றுடன் வண்ணக் கோலப்பொடி கலந்து கோலம் போடலாம். இரசாயனம் இல்லாத இயற்கையான வண்ணப்பொடியை பயன்படுத்தினால், ஈ மற்றும் எறும்பு போன்ற ஜீவன்களுக்கு உணவிட்ட திருப்தியை ஏற்படுத்தும்.

6 மரத்தூள்

மரத்தூள் சில இடங்களில் எளிதில் மலிவான விலையில் கிடைக்கும். வீட்டில் ஏதேனும் மர வேலை செய்யும் போது வீணாகும் மரத்தூளை வெயிலில் உலர்த்தி வண்ணக் கோலப்பொடி சேர்த்து பயன்படுத்தலாம்.

7 அரிசி

நீர் சேர்த்து கரைத்த வண்ணப்பொடியில் முழு அரிசியை சேர்த்து உலர்த்தி கோலத்தில் பயன்படுத்தலாம்.

8 ஜவ்வரிசி

ஜவ்வரிசியிலும் நீரில் கரைத்த வண்ணப்பொடியை கலந்து உலர்த்தி பயன்படுத்தலாம்.

9 தேநீர் தூள்

வீட்டில் தேநீர் தயாரித்த பின் வீணாகும் தூளை உலர்த்தி கோலத்தில் பயன்படுத்தலாம்.

குறிப்பு :

1 கோலத்தில் வண்ணக் கோலப்பொடியை போட்டு முடித்த பின், வெள்ளைக் கோல மாவைக் கொண்டு பட்டையாக மீண்டும் வரைந்தால் கோலம் தெளிவாகத் தெரியும்.

2 வெள்ளை கோல மாவுடன் அரிசிமாவைக் கலந்தால் கோலம் பளிச்சென்று தெரியும்.

3 ரங்கோலி கோலம் போடும் போது கோலப் பொடியைத் தவிர்த்து, சாக்பீஸ் கொண்டு வரைந்தால் அழித்து வரைய எளிதாக இருக்கும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon