Link copied!
Sign in / Sign up
21
Shares

பொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கித்  தருகையில், பெற்றோர் பெரும் தவறினை தங்களை அறியாமலே செய்கின்றனர். அதாவது பெண் குழந்தைகளுக்கு பார்பீ போன்ற பொம்மையும், ஆண் குழந்தைகளுக்கு கார், பைக் போன்ற பொம்மைகளையும் வாங்கித்தந்து, 'நீ ஆணாக வளர வேண்டும், நீ பெண்ணாக வளர வேண்டும்' என்ற குறுகிய மனப்பான்மையை அந்த பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கிறீர். இது பற்றிய உண்மை விவரங்களை பதிப்பை படித்து அறியலாம்..! 

1. எல்லை..!

பொம்மைகளை பாலினம் பார்த்து வாங்கிக் கொடுப்பதால், குழந்தைகளின் சிந்திக்கும் திறன் மற்றும் ஆற்றல் ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே அமைந்து விடுகிறது. உங்கள் குழந்தையின் திறன் ஒரு வட்டத்திற்குள் அமைய, நீங்களே காரணமாகிவிடுகிறீர் பெற்றோர்களே!

2. கற்றல்..!

ஒரு குறிப்பிட்ட வகை பொம்மைகளை மட்டுமளிப்பதால், அவர்களின் கற்றல் குன்றிவிடுகிறது. குழந்தைகளுக்கு பலவகை பொம்மைகளை அறிமுகப்படுத்த மறக்காதீர்; ஏனெனில் பொம்மைகளை வைத்து விளையாடுவது, மேலும் அவற்றை பற்றி அறிவது போன்றவை குழந்தையின் சிந்தனை திறன் வளர காரணமாகும்..!

3. விருப்பம்..!

குழந்தைகள் என்ன பொம்மைகளை விரும்புகிறார்களோ அதை அளியுங்கள்; அதை விடுத்து உங்கள் விருப்பங்களை திணிக்காதீர். குழந்தைகள் எவ்வகை பொம்மைகளை வைத்து விளையாட எண்ணுகின்றனரோ அதையே அவர்களுக்கு அளியுங்கள்; குழந்தைகளை அவர்களின் தனித்திறனுடன் வளரச் செய்யுங்கள்...!

4. சமநிலை..!

குழந்தைகளிடத்தில் 'நீ பெண், ஆகையால் துப்பாக்கி, கார் போன்ற பொம்மைகள் உனக்கில்லை' என்று சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொள்ளாமல், சற்று பரந்த மனப்பான்மையுடன் நடக்க முயலுங்கள்..! ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை குழந்தை பருவத்திலிருந்தே உணர்த்துங்கள்.!

5. பாகுபாடு..!

ஆண் பெண் என்ற பாகுபாட்டினை, மழலைகளின் மனத்தில் விதைக்காமல், அவர்களை தன்னம்பிக்கையுடன் வளரச் செய்யுங்கள். 'உன்னால் எதையும் சாதிக்க இயலும்' என்று சொல்லி வளருங்கள். ஆண் பெண் என்ற வேறுபாடு, உடலளவில் மட்டுமே, ஆணுக்கு பெண் குறைந்தவளல்ல; இருவரும் சமமானவரே என்ற கொள்கை மனதில் வேரூன்றம் வண்ணம் குழந்தைகளை வளர்க்க வேண்டும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon