Link copied!
Sign in / Sign up
3
Shares

பொலிவான சருமத்திற்கான 6 உணவுகள்

எல்லாருக்கும் அழகாக தோற்றமளிக்க வேண்டும், ஒளிரும் சருமம் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சந்தையில் பல அழகு சாதன பொருட்கள் கிடைத்தாலும், நமது வாழ்க்கை முறையே நமது சருமத்தின் அழகை நிர்ணயிக்கின்றது. வாழ்க்கை முறை என்பது நாம் தினமும் செய்யும் விஷயங்கள் மற்றும் நமது உணவு பழக்கங்கள் ஆகும். சத்தான உணவுகள் நமக்கு உடல் ஆரோக்கியத்தை அளிப்பதோடு நமக்கு ஆரோக்கியமான சருமத்தையும் தருகிறது. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1 தக்காளி

ஒரு தக்காளியை சாப்பிட நம்மில் எத்தனை பேர் பல முறை யோசித்திருப்போம். இவை வேனிற்கட்டிக்கு சிறந்த தீர்வாகும். தக்காளியில் உள்ள லிகோபீன் சூரிய கதிர்களால் ஏற்படும் வேனிற்கட்டிகளை தடுக்கிறது. சமைத்த பின்பு இந்த புரதம் உடலுக்கு பெரும் நன்மை பயக்கிறது. தக்காளி சூப் சருமத்திற்கு மிகவும் நல்லது.

2 பாதம் பால்

ஆய்வுகளில், பால் சார்ந்த பொருட்களில் அதிக கொழுப்பு இருப்பதால், அவை சரும பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கண்டறிப்பட்டுள்ளது. பால் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக பாதம் பாலை பயன்படுத்தலாம். இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் உங்களுக்கு மென்மையான ஜொலிக்கும் சருமம் கிடைக்கும். மேலும், இது சருமம் வயதாவதை தடுக்கிறது.

3 கிரீன் டீ

தினமும் காலையில் கிரீன் டீ குடிப்பதால் சருமம் மேம்படுவதோடு, உடல் கொழுப்பையும் குறைக்கிறது. அடிக்கடி கிரீன் டீ பருகுபவர்களின் சருமம் மென்மையாக இருக்கும். மேலும், இது சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. கிரீன் டீ சருமத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை சீராக வைத்திருப்பதால், உங்கள் சருமம் இயற்கையாக ஒளிரும் தன்மை பெறுகிறது.

4 டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் கோகோ அதிகளவு உள்ளது. கோகோ உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதால், உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும், டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகளவில் இருப்பதால் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். சீரான ரத்த ஓட்டம் ஆரோக்கியமான சருமத்தை வழங்கும்.

5 கேரட்

கேரட்டும் சருமத்திற்கு நல்லது. ஒரு ஆய்வில், கேரட்டில் அதிகளவு இருக்கும் கரோட்டினாய்டு உங்கள் சருமத்திற்கு மஞ்சள் நிறத்தை வழங்குகிறது. இதுவே ஆரோக்கியமான நிறமாக கருதப்படுகிறது. கேரட் சருமத்திற்கு இயற்கையான மிளிரும் தன்மையை வழங்குகிறது.

6 முட்டை

முட்டை ஒரு புரத சத்துள்ள உணவு. இதை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உங்கள் உடலின் ஆரோக்கியம் மேம்படும். சருமம் வயதாவதற்கு காரணம், உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பாக கூட இருக்கலாம். முட்டையில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.

வால்நட், சக்கரைவள்ளிக் கிழங்கு போன்றவையும் சருமத்தை மேம்படுத்தும் உணவுகளாகும்.இவையெல்லாம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon