Link copied!
Sign in / Sign up
5
Shares

பிரசவம் சுகமாக உதவும் 7 அந்தக் கால குறிப்புகள்..!

கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணின் கனவாக, ஆசையாக, இலட்சியமாக இருப்பது ஆரோக்கியமான குழந்தை மற்றும் சுகமான பிரசவம். இந்த இரண்டையும் ஒரு பெண் பெற வேண்டுமானால், பெண்ணானவள் தனது கர்ப்ப காலத்தில், சரிவிகித உணவு, சரியான உடற்பயிற்சி, தைரியமான மனோதிடம் என உடல் மற்றும் மன பலம் கொண்டு திகழ வேண்டும். 

இந்த வகையில், கர்ப்பகாலத்தில், கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சில விஷயனாகில், நடைமுறை பழக்க வழக்கங்கள் மற்றும் ஆயுர்வேத குறிப்புகள் போன்றவை இந்த பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன; படித்துப் பயனடையுங்கள்...!

உணவு 

காய்கறிகள், பழச்சாறுகள், பழங்கள், தானிய வகைகள், கீரை வகைகள் என அனைத்து வகை உணவுகளையும், அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவிகித உணவாக தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இது ஆரோக்கியமான குழந்தையை பெறவும், உங்கள் உடலை பலப்படுத்தவும் உதவும்.

அஸ்வகந்தா 

கர்ப்ப காலத்தில் நெய்யையும், அஸ்வகந்தா மூலிகை பொடியையும் பாலில் கலந்து பருகுவது மிகவும் நல்லது; இதனை முதல் 3 மாதங்களில் பருகுதல் வேண்டும். அஸ்வகந்தா, கர்ப்பிணி பெண்களுக்கு வலிமையை தந்து கருவை பாதுகாக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. சுத்தமான நெய் சேர்ப்பது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், இதனை வெறும் வயிற்றில் உண்ணுதல் கூடவே கூடாது.

கொழுப்பு உணவுகள் 

கர்ப்ப காலத்தில் நீங்கள் கட்டாயம் துரித உணவுகளையோ அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; மேலும் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை 

கர்ப்ப காலத்தில், நேரம் சூரிய ஒளியில் இருப்பது, மிகவும் சிரமமான உடற்பயிற்சிகள், அதிக எடைகளை தூக்குவது, நீண்ட மற்றும் மிக அதிக தூரம் நடப்பது, அதிக நேரம் வெயிலில் அலைதல் போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம். 

தூக்கம் 

கர்ப்ப காலத்தில் நன்கு தூங்க வேண்டியது அவசியம்; ஆகையால் போதிய அளவு தொந்தரவு இல்லாத, கலையாத தூக்கம் கொள்ள முயலுங்கள். தூக்கத்தில் இருந்து எழும் போது, பதட்டப்படாமல், பொறுமையாக எழுங்கள்.

உணர்ச்சிகள் 

கர்ப்ப காலத்தில் தாயின் மனநிலை மகிழ்ச்சி கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்; கர்ப்ப காலத்தில் சோகமாக இருப்பது, கோபப்படுவது, பயப்படுவது, அளவுக்கு அதிகமான அதிர்ச்சிகள் கொள்வது என்பது கூடவே கூடாது. இது கருவிலிருக்கும் குழந்தையை பாதிப்பதாக இருக்கும். 

மசாஜ் 

கர்ப்பத்தின் 3வது மாதத்திலிருந்து பிரசவம் வரை, தாய் எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மசாஜ் வலிகள், பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் வருவது, சோர்வாக உணர்வது, சருமம் சுருங்குவது போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆளி விதை எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon