Link copied!
Sign in / Sign up
2
Shares

பிரசவத்தை எதிர்க்கொள்ள எட்டு வழிகள்?

இந்த உலகத்தில் மிக அழகிய மற்றும் யாரும் அடைந்திடாத ஒரு தருணம் தான் கர்ப்பிணி பெண்களின் பிரசவ காலமாகும். அவர்கள் பிரசவ அறையில் எழுப்பும் ஒலியின் அளவானது ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட ஆச்சரியத்தின் உச்சம் என்பதும் உண்மையே. சுக பிரசவம் என பெயர் வைத்தாலும், பெயரில் மட்டுமே கர்ப்பிணி பெண்கள் தன் பிரசவ காலத்தில் சுகத்தை அடைவார்கள். ஆனாலும், தாய்க்கும் குழந்தைக்கும் உண்டான பந்தத்தை பிரசவத்தின் போதே வலிமையாக்குவது சுகப்பிரசவம் தான். ஒரு பெண் எவ்வளவு வலியை தாங்கினாலும்... அது அனைத்தும் அவள் குழந்தையை தன் கைகளில் தாங்கும் வரையிலே ஆகும்.

அப்படிப்பட்ட பிரசவ காலத்தில் எதிர்கொள்ள எளிதாக்கும் எட்டு வழியை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. நெருப்பின் மீது நீர் ஊற்றுங்கள்:

முதல் முறையாக பிரசவ நிலையை சந்திக்கப்போகும் பெண்ணின் மனதில் பல சிந்தனைகள் ஓடக்கூடும். "எனக்கு என்ன நடக்கும்? பிரசவத்தின் போது எப்படி இருக்கும்?" இப்படி பல சிந்தனைகள் இருக்கக்கூடும். இவை அனைத்தையும் மறந்து, உங்கள் குழந்தையை எப்போது காண்பது? எனும் ஏக்கத்தை மட்டும் மனதினுள் செலுத்துங்கள்.

2. மனநிலை அமைதி:

உங்கள் பிரசவத்தின் முன்பு மிகவும் இறுக்கமான சூழலை உருவாக்கி கொள்ளாதீர்கள். இதனால், மனதில் பதட்டம் மட்டுமே உருவாக, உங்கள் நிலையில் ஏற்படும் மாற்றம் கருவில் இருக்கும் குழந்தைக்கும் குடைச்சல் கொடுத்திடும்.

3. விருப்பமானவர்கள் உடன் இருத்தல்:

பிரசவத்தின் போது ஏற்கனவே இந்த பிரசவ வலியை சந்தித்த ஒருவர் உங்களுடன் இருத்தல் நலம். ஆனால், அவர் உங்களுக்கு தோல் கொடுக்கும் தோழனாக இருத்தல் வேண்டும். அதாவது, நீங்கள் அடையும் வலியை திசை திருப்பி உங்கள் நேரத்தை இனிமையாக மாற்றக்கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும். பயப்படும்படி சொல்லும் எவரும் பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

4. மெல்ல நகருங்கள்:

பிரசவத்தின் முன்பு உங்கள் மனம் விரும்பிய ஒருவருடன் சேர்ந்து கர்ப்பத்திற்கு உகந்த யோகா செய்வது நல்லது. ஒரே இடத்தில் முடங்கி இருந்திடாமல் பாதுகாப்புடன் இயற்கையை ரசித்திடலாம்.

5. தியானம் மேற்கொள்ளுங்கள்:

உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக இருந்திடுங்கள். இதனால், உங்களை சுற்றி நடக்கும் மன உளைச்சல் சம்பவங்கள் யாவும் விலக கட்டளை பிறப்பிக்கும். இது உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் மிக நல்லது என்பதோடு... பிரசவத்திற்கு முன்பே இது உங்களை தேவையான நிலைக்கு தயார்படுத்துகிறது.

6. நீர் அளவு பரிசோதனை:

உங்கள் இறுகிய தசைகளை தளர்வடைய செய்ய வெதுவெதுப்பான நீர் உதவுகிறது. இதனால் மருத்துவமனையில் பிரசவிக்க போகும் பெண்களுக்கு நீர் கொடுப்பது வழக்கம். எந்த ஒரு பிரசவ நிலையிலும் மிதமான குளியல் என்பது மிகுந்த சவுகரியத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. அதேபோல், மருத்துவரின் பரிசோதனையுடன் இதை செய்வது  நல்லது.

 

7. நிலையை கடக்க பழகுதல்:

கர்ப்ப காலத்தின் போது உண்டாகக்கூடிய வலியை மெல்ல கடக்க பழகுங்கள். இதனால், தேவையான தைரியத்தை குழந்தை பிறக்கும் முன்னரே உங்களுக்கு தர, உங்கள் குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக பிறந்திடும்.

8. தயார்ப்படுத்தி கொள்ளுதல்:

கர்ப்பிணி பெண்கள் கவலையும், பயமும் கொண்டால் மிக விரைவில் அதை விட்டு வெளியே வர முயலுங்கள். உங்கள் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி என்பது., நீங்கள் சந்திக்கும் சூழ்நிலையை பொறுத்து அமையக்கூடும். தனிமையில் இருப்பது போல் உணராதீர்கள். தனிமையில் இருந்தாலும், உங்கள் மனதானது தேவையான சந்தோசம் நிரம்ப இருத்தல் வேண்டும்.

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon