Link copied!
Sign in / Sign up
5
Shares

பிரசவத்திற்கு பின் எடையை குறைக்க எட்டு எளிய வழிகள்...

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் அழகிய தருணமாக அமைய, ஒரு சில பெண்கள் பிரசவத்திற்கு பிறகு உடல் ஊதி விடுவதையும் நாம் பார்க்கிறோம். பிரசவத்தின் மூலமாக ஆக சிறந்த பரிசு உங்களுக்கு கிடைத்தாலும்... நீங்கள் ஒரு சில சமயத்தில் வெறுக்கக்கூடிய ஒன்றாக இந்த உடல் எடை என்பது அமைகிறது. அப்படிப்பட்ட உடல் எடையினால் உண்டாகும் வெறுப்பை எப்படி குறைப்பது? வாங்க பார்க்கலாம்...

1. உணவு முறையில் மாற்றம்:

நீங்கள் உணவை குறைத்து சாப்பிடுவதால் உடல் எடை குறையுமென நினைத்து பிரசவத்திற்கு பிறகு உணவு முறையில் மாற்றம் செய்வீர்கள். ஆனால், அந்த உணவு மாற்றமே உங்கள் உடல் எடைக்கு காரணமாவதை என்றாவது நீங்கள் அறிந்ததுண்டா? நீங்கள் புதிய தாயாக இருப்பின், சாப்பிடாமல் மன அழுத்தத்துடன் இருக்க, அதுவே உடல் எடை குறைவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

2. நேரம் பார்த்து உண்ணுதல்:

ஒரு சிலர் ஒட்டுமொத்தமாக தொண்டை வரை ஒரே வேளைக்கு சாப்பிட நினைப்பர். அப்படி அல்லாமல் நீங்கள் மூன்று வேளை முழுவதுமாக சாப்பிட நினைப்பதை ஆறு வேளையாக அரை அளவு எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் வயிறு பெருகுவது கட்டுப்பாட்டில் இருக்கும்.

3. கலோரி குறைவான உணவு:

நீங்கள் புதிய தாயாக இருப்பின் ஊட்டச்சத்து என்பது உங்களுக்கு அவசியமாகிறது. நீங்கள் சத்துள்ள உணவை சாப்பிட, தாய்ப்பால் தருவதற்கும் அது பெரிதும் உதவுகிறது. ஒமேகா கொழுப்பு அமிலம் கொண்ட உணவு, கால்சியம், புரத சத்து, நார்ச்சத்து முதலியவை அடங்கிய சால்மன் மீன், மத்தி, சூரை மீன், மெலிந்த இறைச்சி, கோழி, முட்டை, பீன்ஸ், தயிர் மற்றும் முழுதானியம் சாப்பிடலாம். கலோரி அதிகம் கொண்ட உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை உங்களால் குறைக்க முடியும்.

4. நீர்ச்சத்து தேவை:

ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ப்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற நச்சுக்கள் நீங்குகிறது. நீங்கள் குடிக்கும் நீர் மற்றும் நீர் சார்ந்த பானங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது. மில்க் ஷேக், சூப், ப்ரெஷ்ஷான ஜூஸ் போன்றவையும் நீங்கள் குடிக்கலாம்.

5. உடற்பயிற்சி அவசியம்:

நீங்கள் அன்றாட நாளையில் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் எடையை குறைக்கலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்முன்னே மருத்துவரின் பரிந்துரை என்பது அவசியமாகிறது. நீங்கள் எளிதான உடற்பயிற்சிகளையும் நடைப்பயிற்சி, ஜாக்கிங்க், யோகா போன்றவற்றையும் கூட செய்து உங்கள் எடையை குறைக்கலாம்.

7. தூக்கம் வேண்டும்:

பொதுவாக புதிய தாய்மார்களுக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். இது முடியாத காரியம் என்றாலும், நீங்கள் தூங்க முயல்வது எடை ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். உங்கள் வீட்டு வேலைகளை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு நீங்கள் தூங்க முயற்சி செய்வது மிகவும் நல்லது. 

 

8. தயிர் சாப்பிடலாம்:

எப்போது உங்களுக்கு மிகவும் அசதியாக இருக்கிறதோ...அப்போது ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம். தயிரை குளிர்சாதன பெட்டியில் வைத்து அத்துடன் நறுக்கிய பழங்கள் அல்லது பருப்பை சேர்த்து ஐஸ் கிரீம் போலவும் நீங்கள் சாப்பிடலாம். இதனால் உடல் எடை கூடுவது தவிர்க்கப்படும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon