Link copied!
Sign in / Sign up
6
Shares

பிரசவத்திற்குப் பின்னான முடி உதிர்வு பற்றிய 5 விஷயங்கள்..!

குழந்தைகள் நம் வாழ்வில் வந்தவுடன், பல விஷயங்கள் மாறிவிடும். பலவிதமான பொறுப்புகளும் பலவிதமான உடலியல் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கும். குழந்தை உண்டான நிமிடம் முதல் பெண்களின் உடலில், பலவித ஹார்மோன் சுரப்புகளும், ஹார்மோன் மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்.இந்த ஹார்மோன் மாற்றங்கள் பலவித உடல் மற்றும் தோற்ற மாற்றங்களை பெண்களில் ஏற்படுத்துகிறது. இவற்றில் முடி உதிர்வு என்பது இளம் தாய்மார்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது; பெண்களில் சிலருக்கு முடி வளர்வது நின்றிருக்கலாம்; சில ருக்கு முடிகளில் அடர்த்தியான முடிச்சுகள் ஏற்பட்டிருக்கலாம், இது அதிக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதால் ஏற்படுகிறது.    

இத்தகைய பிரசவத்திற்கு பின் ஏற்படும், முடி உதிர்வு குறித்த மற்றும் முடி உதிர்வைத் தடுக்க சில விஷயங்களை பற்றி இப்பதிப்பில் காணலாம்..! வாருங்கள் பெண்களே! இளம் தாய்மார்களே!

1. தாது பொருட்கள் நிரம்பிய உணவுகள்..!

முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்கள் போதிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இல்லாதது தான்; முடி வளர்ச்சிக்கு சரியான வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்றவை மிக அவசியம். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் முடி உதிர்வைத் தடுக்க உதவுகின்றன. சோயா, முழு தானியங்கள், பச்சை பட்டாணி, கடலைகள், ஆரஞ்ச் போன்றவையும் முடி உதிர்வைத் தடுத்து, நன்கு வளர உதவுகின்றன. தினமும் மோர் குடிப்பது முடி வளர்ச்சிக்கு நல்லது.

2. கூந்தலுக்கு கருணை..

பலவித செயற்கை பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதை தவிருங்கள்; அழகு நிலையம் சென்று முடியினை ஸ்டைலாக மாற்றுகிறேன் என்று கூந்தலைக் கொடுமைப்படுத்தாமல், கூந்தலின் மீது, சிறிது இரக்கம் காட்டுங்கள். முடியை நேராக்குகிறேன், கலராக்குகிறேன் என்று எந்த தேவையில்லாத செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை இயற்கை பொருட்களை உபயோகிக்க முயல்வது நல்லது.

3. மசாஜ் செய்யுங்கள்…

முடிக்கு பயன்படுத்தும் எண்ணெயை சூடுபடுத்தி, மாசாஜ் செய்தால் நல்ல பலன் இருக்கும். மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் சீராகும். ஆகையால், கூந்தலுக்கு தினம் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது நல்லது.

4. இயற்கை பொருட்கள்..

முடியின் வளர்ச்சிக்கும், முடி உதிர்வைத் தடுக்கவும் முடிந்த அளவு இயற்கை முறையில் தயாரித்த சீகைக்காய், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துங்கள்; கூந்தலுக்கு ஊட்டம் தரும் இயற்கை பொருட்களான, முட்டை, எலுமிச்சை, மருதாணி இலைகள், செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகள் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

5. ஷாம்பு..

அடிக்கடி ஷாம்பு மாற்றுவது பற்றி, நன்கு சிந்தித்து முடிவெடுங்கள்; மருத்துவ ஆலோசனையுடன் ஷாம்புவை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சீகைக்காயை இயற்கை முறையில் தயாரித்து உபயோகிக்கவும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon