Link copied!
Sign in / Sign up
2
Shares

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு தொப்பை வரக் காரணமென்ன?

திருமணமான இளம் பெண்களுக்கு, கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்று எடுப்பது என்பது, பெண்ணுக்கு அளவற்ற பூரிப்பையும், மகிழ்ச்சியையும் தரும் வாழ்வின் மறக்க முடியாத முக்கிய தருணமாக இருக்கும். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பாலூட்டும் போது, சுற்றத்தாரின் வாழ்த்துக்களில், உறவினர் மனநிறைவினில், தாய்மையின் பரவசத்தில், உள்ளம் நெகிழ்ந்துபோய், உடல் பெருக்க ஆரம்பிப்பாள், இளம் அன்னை. 

இந்த நிலை தரும் உற்சாகத்தில், கர்ப்ப காலத்தில் நீங்கள் தவிர்த்த உணவுகளையெல்லாம், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் உள்ளத்தில் பொங்கும். இதனால், ஏற்படும் விளைவு? சொல்ல வேண்டியதேயில்லை, உங்கள் உடல் தானாக பெருத்து பருமனடைய தொடங்கும். அப்டி பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் பருமனுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

தொப்பைக்கு காரணங்கள்..!

1. தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பாலூட்டும் போது, சுற்றத்தாரின் வாழ்த்துக்களில், உறவினர் மனநிறைவினில், குழந்தை செய்யும் சேஷ்டைகளால்,குழந்தையின் சிரிப்பில், அழகில், தாய்மையின் பரவசத்தில், உள்ளம் நெகிழ்ந்துபோய், உடல் பெருக்க ஆரம்பிப்பாள், இளம் அன்னை. 

2. பிரசவத்தால் ஏற்பட்ட களைப்பினால் நீடிக்கும் பசியால், கிடைப்பதை அவ்வப்போது உண்ணும் போதும் பெண்களின் உடல் எடை கூடத் தொடங்குகிறது. 

3. சிசேரியன் ஆன பெண்களுக்கு அதிக உடல் இயக்கமின்றி படுத்தே இருப்பதாலும், உடல் அசதியாலும் உடல் எடை கூடுகிறது.

4. சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின், வயிற்றில் கொழுப்பு சேர்வதால், காற்று நிரம்புவதாலும் தொப்பை ஏற்படுகிறது. 

அக்கால தீர்வு!

பிரசவமான பின், பெண்களின் வயிற்றில், இறுக்கமாக, காசித்துண்டை கட்டி வைப்பார்கள்; கால்களையும், சேர்த்து போட்டு அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே, காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, 10 பிள்ளைகள் பெற்றாலும், பெண்கள் ஒட்டிய வயிரும், மெலிந்த உடலுமாக, அக்கால இளம் தாய்மார்கள், இன்றும் ஆரோக்கியமாக, வாழ முடிகிறது!

விளைவு!

1. பிரசவத்தால், கூடிய எடையை குழந்தை சற்று வளர்ந்த பின் அதாவது குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னர், நீங்கள் குறைக்காது அதையே தொடர்ந்தால், உங்கள் உடல் எடை குறையவே குறையாது; இது உங்கள் தோற்றத்தை அசிங்கமானதாக்கலாம்.

2. இதனால் உங்கள் கணவருக்கு உங்கள் மீதுள்ள காதல், அன்பு குறையும் வாய்ப்புள்ளது; இந்த நிலை கணவன் தன்னை புறக்கணித்து விடுவானோ? எளிதாய், எழுந்து, நடந்து, வேலை பார்க்க முடியவில்லையே என்று உங்கள் மனதில் ஒரு பாரத்தை, பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

3. சினிமாவில் கூறுவது போல எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல், கூடிய எடையால் உங்கள் முன்னால் தோற்றத்தை குறித்து எண்ணி ஏக்கம் கொள்ளத் தொடங்கி விடுவீர்கள், இந்த பிரசவ உடல் எடை அதிகரிப்பால்.!

குழந்தைக்கு தாய்ப்பால் தர நீங்கள் நன்கு உண்டுதான் ஆக வேண்டும்; ஒரு வருடம் குண்டான தோற்றம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அதன்பின் சரியான உணவுமுறை மற்றும் சரியான உடற்பயிற்சி மூலம் எளிதில் நீங்கள் கொண்ட உடல் எடையை குறைத்து விடலாம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon