பிரசவத்திற்கு பின் மலம் கழிப்பது அசாதாரண அனுபவமாக இருக்கிறதே ஏன்..??
பிரசவத்தை வெற்றிகரமாக முடித்த இளம் தாய்மார்களே! கர்ப்ப காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வினை நாங்கள், நீர் தாயான பின் எதிர்கொள்ளும் சவால்களை சந்தித்து, சமாளிக்க துணை புரியும் வகையில் உங்களுடனேயே உள்ளோம். பிரசவத்திற்கு பின், நீங்கள் மலம் கழிப்பதில் சந்திக்கும் அசாதாரண நிலைக்கு தீர்வு தரும் வகையில் இந்த பதிப்பினை சமர்ப்பிக்கிறோம்.
1. தாமதிக்காதீர்..!
உங்களுக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போது, அந்த உணர்வினை தள்ளி போடாதீர்கள். ஏனெனில் அது நீங்கள் அசாதாரண நிலையை சந்திக்க காரணமாக அமையும். ஆகையால், இவ்வகை உணர்வு ஏற்படும் போது, தாமதிக்காதீர்.
2. உதவும் உணவுகள்..!
மலம் கழிப்பதை எளிமையாக்க, உதவும் உணவு வகைகளை உட்கொள்ளவும்.
3. செரிமானமாகும் உணவுகள்..!
செரிமானத்தை தாமதப்படுத்தாத, செரிமானத்திற்கு உதவும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவும். மலச்சிக்கலை தவிர்க்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
4. மருந்துகள்..!
மலம் கழிப்பதில் அதிக பிரச்சனைகளை மேற்கொண்டால், அதற்கேற்ற மருந்து மற்றும் மாத்திரைகளை உங்களுடனேயே வைத்துக் கொள்ளவும். மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே, மருந்துகளை உபயோகிக்க தொடங்கவும்.
5. கூச்சத்தை விடுங்கள்..!
நீங்கள் மலம் கழிப்பது குறித்து அதிகபட்ச பிரச்சனைகளை எதிர்கொண்டால், இதை எப்படி மருத்துவரிடம் வினவுவது என கூச்சப்படாமல், துணிந்து மருத்துவரிடம் உங்கள் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளை பற்றி கேட்டறிந்து தெளிவு பெறுங்கள்..!
