Link copied!
Sign in / Sign up
33
Shares

பிரசவத்திற்கு பின் குழந்தை உங்கள் உடலில் விட்டுச்செல்லும் ஆச்சரியமான விஷயங்கள்..!

எல்லா பெண்களும் பிரசவத்திற்கு பின், குழந்தை தன்னில் இருந்து இறங்கி மண்ணில் வாழ சென்று விட்டதே! இனி நம்மால் குழந்தையை சுமக்க இயலாதே! என்று சிறிது மனவருத்தம் கொள்கின்றனர். ஆனால், இது தேவையில்லாத மனவருத்தம். ஏன் தெரியுமா? குழந்தைக்கும் உங்களை விட்டு பிரிவதில் விருப்பம் இல்லை; ஆகையால், உங்களில் இருந்து பிறக்கும் குழந்தை தன் சில பாகங்களை உங்களில் விட்டுச் செல்கிறது. அப்படி என்ன விஷயங்களை குழந்தை விட்டுச் செல்கிறது என்பது பற்றி, இந்த பதிப்பில் படித்தறியலாம்..

சமீபத்திய ஆய்வில், ஆய்வாளர்கள் குழந்தை தன் செல்களை தாயின் கருவறையில் விட்டுச் செல்வதாகவும், இந்த செல்கள் தாயின் உடலால் ஏற்கப்பட்டு, தாயின் உடல் செல்களோடு பிணைக்கப்பட்டு விடுவதாகவும் கண்டறிந்துள்ளனர்..!

சிலரோ, இந்த செல்கள் உங்கள் மூளைக்கு சென்று, அங்கு இருக்கும் நரம்பியல் செல்களோடு இணைந்து விடுவதாக கூறுகின்றனர்..

இந்த செல் பிணைப்பிற்கு பின்னான, ஜீன் அமைப்பை Microchimera என்று அழைக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்த செல் பிணைப்பு, preeclampsia & autoimmune என்ற நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. இந்த நோய், தாயின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருந்தாலோ அல்லது வைரஸ் தாக்குதல் நிகழ்ந்திருந்தாலோ ஏற்படும்.

ஆனால், பல ஆய்வுகள், குழந்தை செல்கள் அன்னையை பல நோய்களில் இருந்து காப்பதாகவும், முக்கியமாக அன்னைக்கு கேன்சர் எனும் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் கூறுகின்றன..

சமீபத்தில், 272 பெண்கள் பரிசோதிக்கப்பட்டார்கள்; அவர்களில் 70% சதவீதத்தினர், Y குரோமோசோம்கள் அவர்கள் இரத்தத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது; இது குழந்தைகளால் அளிக்கப்பட்டதே! Tஇவர்களில் 60% புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக ஏன் முற்றிலுமாகவே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, பெண்களின் இரத்தத்தில் ஆணின் குரோமோசோம் உள்ளதா என்ற பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. பெண்ணின் உடலில் XX குரோமோசோம்களுடன் Y குரோமோசோம்கள் காணப்படுவது, ஆய்வை மெய்யாக்கியுள்ளது..

Microchimera, பெண்கள் அல்சைமர் & மார்பக புற்றுநோய் ஏற்படுவதை குறைத்துள்ளது..! இதனாலேயே, பெண்கள் ஆண்களை விட அதிக வாழ்நாள் கொண்டு திகழ்கின்றனர். இது ஒரு விசித்திரமான நிகழ்வே! ஆனால், உலகில் பெண்ணைப் போல், இத்தனை அதிசயம் கொண்ட உயிரினம் ஏது? ஆகையால், பெருமை கொள்வோம்.., பெண்ணாய் பிறந்ததற்கு..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon