Link copied!
Sign in / Sign up
0
Shares

பிரசவத்திற்கு முன் ஆசைப்படும் 5 விஷயங்கள்..!

கர்ப்பம் தரித்த அந்த கணம் முதல் தன் குழந்தை மண்ணைத் தொடப்போகும் அந்த நொடிக்காக காத்திருப்பாள், பெண். கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் குழந்தையின் நினைவோடே கழிப்பாள், கர்ப்பிணி. அப்படி குழந்தையின் நினைவில் வாழும் பெண் சில எதிர்பார்ப்புகள், ஆசைகள் கொண்டிருப்பாள். அவை என்னவென்று இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

1. குழந்தையின் உடல்…

குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பிறக்க வேண்டும் என்பதே பெண்ணின் முழுமுதல் எண்ணமாக விளங்கும். அதற்காக சத்தான ஆகாரங்களை உட்கொண்டு, குழந்தைக்கு ஊட்டம் அளிக்க முயல்வாள்.

2. குழந்தையின் தோற்றம்..

குழந்தை யாரைப் போன்ற தோற்றம் கொண்டு பிறக்கப்போகிறது என்று காண பெரும் ஆவல் கொண்டு காத்திருப்பாள்..

3. குழந்தையின் குணம்..

குழந்தை எவ்வித குணங்களைக் கொண்டதாய் விளங்கப் போகிறது என்று எண்ணி வியப்படைவாள்..

4. குழந்தையின் எதிர்காலம்…

குழந்தையின் படிப்பு மற்றும் அதன் எதிர்காலம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்ற கனவுகளும் ஆசைகளும் பெண்ணின் மனதில் மாபெரும் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

5. பிரசவம்..

தனக்கு எவ்வகை பிரசவம் நிகழப் போகிறது, அது வலி நிறைந்ததாக இருக்குமோ என்று எண்ணி சஞ்சலமும், பயம் கலந்த குழப்பமும் அடைவாள், பெண்மணி..!

பெண்களே! எதிர்ப்பார்ப்பில்லாத வாழ்க்கையே குறைந்த ஏமாற்றங்களைக் கொண்டிருக்கும் - இந்த கூற்றை அனைவரும் கருத்தில் கொண்டு, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ முயல வேண்டும். அதுவே அளவில்லா இன்பத்தை அளிக்கும்..! வாழ்க வாழ்க்கையுடன்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon