Link copied!
Sign in / Sign up
1
Shares

பிரசவத்தை சுலபமானதாக சுகப்பிரசவமாக மாற்றிடும் நடனம் - அறிவீரா?!!

குழந்தையை கருத்தரித்திருக்கும் பெண்கள் அனைவர்க்கும் இருக்கும் ஒரு முக்கிய கவலை சுகப்பிரசவம் ஆக வேண்டும், பிரசவ வலி குறைவாக இருக்க வேண்டும், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதே! இந்த அனைத்து கவலைகளுக்கும் ஒரே ஒரு தீர்வு உண்டென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் தோழியரே! உங்களின் பிரசவ வலி குறித்த பயத்தை போக்கிட ஒரு எளிமையான வழி உள்ளது; அப்படி என்ன எளிமையான வழி என்று கேட்கிறீர்களா?

அந்த எளிய வழியின் பெயர் நடனம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வினில் நிறைமாத கர்ப்பிணிகள் எளிய நடனம் மற்றும் நல்ல நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், பிரசவ வலி குறைந்து, சுலபமாக சுகப்பிரசவம் நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின், கர்ப்பிணிகளின் உடல்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், பிரசவத்தை எளிதாக்கிட நடனம் உதவுவதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்று பல மருத்துவமனைகளில், கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை தூண்ட இந்த நடனப்பயிற்சி வழங்கப்படுகிறது; இந்த நடனப்பயிற்சி கர்ப்பிணிகளின் பிரசவ வலியை தூண்டுவதோடு மட்டும் நில்லாது, பிரசவம் மிகவும் சுலபமாக நிகழ்வும் துணை செய்கிறது. அப்படிப்பட்ட நடனத்தினை மருத்துவர்கள் கற்றுக்கொடுக்க, கர்ப்பிணிகள் ஆடுவதை இந்த காணொளியில் கண்டு அறியலாம். இந்த அருமையான செய்தி, அனைத்து கர்ப்பிணிகளையும் எட்ட, பதிப்பினை பகிர்ந்து உதவுங்கள் தோழியரே!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon