Link copied!
Sign in / Sign up
20
Shares

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 வழிகள்

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு உடல் எடை கூடுவது என்பது இயல்பான ஒன்று. பெரும்பாலான பெண்கள் இந்த கூடியுள்ள எடையை உடனடியாக குறைக்க நினைப்பார்கள். அதற்கான தீர்வுகளை உடனடியாக தேடுவார்கள். பிரசவத்திற்கு பின் உடல் பலவீனமாக இருக்கும் என்பதால், இந்த எடை குறைப்பு முயற்சிகளை கவனமாக செய்ய வேண்டும். உடல் எடை குறைப்பிற்கான 5 சிறந்த வழிகளை இங்கு பார்ப்போம்.

1 எலுமிச்சை

கர்ப்பகாலத்தில் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற எலுமிச்சை பழச்சாறு உதவுகிறது. மேலும், உடல் எடையை குறைக்க இது சிறந்த பாதுகாப்பான முறையாகும். தினமும் காலையில் ஒரு குவளை தண்ணீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து குடியுங்கள். இது உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றும்.

2 சக்கரை

பிரசவத்திற்கு பிறகு நீங்கள் எடுத்துக்கொள்ளும் சக்கரையின் அளவை குறைக்க வேண்டும். தேவையான அளவு சக்கரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில், சக்கரை உடல் எடை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கொழுப்பு மற்றும் நச்சுகளை வெளியேற்ற சக்கரையை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

3 உடற்பயிற்சி

உடல் எடையை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி உடற்பயிற்சி. ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற இதுவே சிறந்த மற்றும் விரைவான வழி. எவ்வளவு அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்களோ அவ்வளவு கலோரிகள் எரியும். அதனால் உடல் எடை விரைவாக குறையும். மேலும், கொழுப்பு கரைந்து உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் இது உதவுகிறது.

4 உணவுமுறை

உடல் எடையை குறைக்க உதவும் மற்றொரு விஷயம் உணவு பழக்க வழக்கம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இயற்கை உணவுகளை நல்ல வேக வைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் எடையை குறைக்கவோ அல்லது நச்சுக்களை வெளியேற்றவோ ஒரு போதும் உதவாது.

5 மூன்று மணி நேர டயட்

மூன்று மணி நேர டயட் மற்றுமொரு பயனளிக்கும் திட்டமாகும். இது விரைவாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் எளிதாகவும் உடல் எடையை குறைக்க உதவும். இதில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் சாப்பிட வேண்டும். இதனால் அதிகமாக பசி எடுக்காது என்பதால் இது உடல் எடையை குறைக்க உதவும். காலை உணவிற்கு பின் மூன்று மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடலாம். மறுபடியும் இடைவேளை விட்டு பழச்சாறு சாப்பிடலாம். மறந்துவிடாதீர்கள், ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
100%
Not bad
0%
What?
scroll up icon