Link copied!
Sign in / Sign up
1
Shares

பிரசவத்திற்கு பிறகு சென்சிடிவ் சருமத்திற்கான 5 அழகு சாதன பொருட்கள்

பிரசவத்திற்கு பிறகு சருமம் வழக்கத்தை விட சென்சிட்டிவாக மாறிவிடும். எனவே, உங்கள் சருமத்தின் மிளிரும் தன்மையை தக்கவைத்துக்கொள்ள சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இங்கு சருமத்தை பராமரிக்க, சந்தையில் குறைவான விலையில் கிடைக்கும், சில தரமான அழகு சாதன பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 SPF லோஷன்

இது நீங்கள் வெளியே செல்லும்போது பயன்படும் முக்கியமான ஒன்று. சூரிய கதிர்களால் உங்கள் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அதிலும், பிரசவத்திற்கு பிறகு உங்கள் சருமம் சென்சிட்டிவாக இருக்கும் என்பதால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். SPF 50+ உள்ள நியூட்ரோஜீனா தயாரிப்பை பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் சருமம் தடிப்பு மற்றும் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.

2 ஃபேஸ் வாஷ்

உங்கள் சருமத்தை வறட்சி இல்லாமல் பாதுகாக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்துங்கள். பயோடிக்கின் தேன் கலந்த ஃபேஸ் வாஷ் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, உங்கள் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.

3 வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய் வரித்தழும்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு. பிரசவத்திற்கு முன்பும் பின்பும் இதை பயன்படுத்த வேண்டும். எவ்வளவு விரைவாக இந்த தழும்புகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவு விரைவாக இந்த தழும்புகள் நீங்கும்.

4 முல்தானி மெட்டி

முல்தானி மெட்டியில் பல பயன்கள் அடங்கியுள்ளன. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் அல்லது முல்தானி மெட்டி மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது தேனையும் கலந்துகொள்ளலாம்.

5 இரவு நேர கிரீம்கள்

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நாள் முழுவதும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும், இரவு நேர கிரீம்களை தினமும் பயன்படுத்துங்கள். இந்த இரவு நேர கிரீம்கள் மாய்ஸ்சரைசரில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த கிரீம்கள் மென்மையாக இருக்கும் என்பதால், உங்கள் சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தாது. உங்கள் உடலிலும் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள, தினசரி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon