Link copied!
Sign in / Sign up
11
Shares

பிரசவத்திற்கு பின் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?

பிரசவத்திற்கு பின் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? இது பலரும் கேட்கும் கேள்வி. இது வலிக்குமா? முன்பு போல் சுகம் கிடைக்குமா? மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்ளும் எண்ணம் வருமா? இப்படி பல கேள்விகள் மனதில் எழும். இங்கே, அவற்றில் சில கேள்விகளுக்கான விடையை பார்க்கலாம்.

1 திட்டமிடல்

உங்கள் குழந்தை நன்றாக தூங்குகிறதா, நடுவில் எழுந்து உங்களை தொந்தரவு செய்யதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதை குறித்து உங்கள் துணையிடம் முன்பே பேசி வைத்துக்கொள்ளுங்கள். திட்டமிடல் மிகவும் அவசியம்.

2 பெண்ணுறுப்பில் வலி

வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை. மேலும், குழந்தை பிறப்பிற்கு பின் பெண்ணுறுப்பில் வலி ஏற்படும். குறிப்பாக சிசேரியன் செய்திருந்தால் வலி இன்னும் அதிகமாக இருக்கும். பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் அதிக வலி ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால், உடலில் ஈஸ்ட்ரோஜெனின் அளவு குறைந்து அந்த இடத்தில் வறட்சியாக இருக்கும். அதனால், ஈரப்பதம் அளிக்கும் லோஷனை பயன்படுத்தலாம். பிரசவத்திற்கு பின், காயங்கள் குணமாக ஆறு வாரங்கள் காத்திருப்பது மிகவும் நல்லது.

3 ஆசை

ஒரு தோழிக்கு, பிரசவத்திற்கு பின் இரண்டு மாதங்கள் வரை உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற ஆசை எழவில்லையாம். அவருக்கு, இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால், அது அவரது ஆசையை மேலும் குறைத்து விட்டது. அவரது தோழி, பிரசவத்திற்கு பின் உடலுறவு கொண்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், துவண்டுவிட்டார். பின்பு, அவரது கணவரிடமும், மருத்துவரிடமும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு உடலுறவு கொண்டுள்ளார். மேலும், அது அவ்வளவு மோசமாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

4 உடலுறவு சிறப்பாக உள்ளதா?

பலருக்கும் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் உடலுறவு சிறப்பாக இருக்குமா என்பது தான். பலரும் சிறப்பாக இருக்கிறது என்று தான் சொல்கிறார்கள். ஒரு தம்பதி, " குழந்தை உள்ளதால், முன்பு போல் பல விஷயங்களை செய்ய முடியவில்லை என்றாலும், அதை வேடிக்கையாக செய்ய முயற்சிக்கின்றோம். இது முன்பை விட சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" , என்கின்றனர்.

5 பெண்களின் மார்பகம்

பிரசவத்திற்கு பின், பெண்களின் மார்பு பாலியல் காரணங்களுக்காக மட்டுமல்ல பாலூட்டவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் துணை உங்கள் தாய்ப்பாலையும் சில நேரங்களில் சுவைக்க கூடும். ஆரம்பத்தில் அசௌகரியமாக இருந்தாலும், போக போக இது பழகி விடும். மார்பை பாலியல் ரீதியான கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே, பிரசவத்திற்கு பின் உடலுறவு கொள்வதற்கு முன் நன்றாக ஆராய்ந்து, திட்டமிட்டு செய்வது நல்லது. நடுவில் உங்கள் குழந்தை எழுந்து அழலாம். இதனையெல்லாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். கொஞ்ச நாட்களில் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்பதை மறக்காதீர்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon