Link copied!
Sign in / Sign up
20
Shares

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைத்த நடிகைகளின் ரகசியங்கள்

திரைப்பட நடிகைகள் அம்மாவான பிறகும் உடல் எடையை குறைத்து உடலை எப்படி கட்சிதமாக பராமரிக்கிறார்கள் என்பது எப்போதும் எல்லோரையும் ஆச்சர்யபட வைக்க கூடிய ஒன்று. அவர்களுக்கும் தான் நேரமில்லை, குழந்தை பராமரிப்பு மற்றும் வேலை என அனைத்தையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் எப்படி பராமரிக்கிறார்கள் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இங்கு குழந்தை பிறந்த பிறகும் இளமையான தோற்றத்துடன் கட்சிதாமாக இருக்கும் சில நடிகைகளின் ரகசியங்களை பார்க்கலாம். 

1 ஐஸ்வர்யா ராய் பச்சன்

இவர் குழந்தை பிறந்த பிறகு சில காலம் தாய்மைக்காக எடுத்து கொண்டு, அதற்கு பின் உடல் எடையை குறைக்க துவங்கினார். இவர்கள் மற்ற நடிகைகளை போல் இல்லாமல், குழந்தையுடன் சில மாதங்களை செலவழித்தார். பின் உடல் எடை குறைத்தல் போன்றவற்றை மேற்கொண்டு, அனைவரும் வியக்கும் படி பழைய நிலைக்கு மாறினார். எடை இழப்புக்கு அவர் பின்பற்றிய இரகசியம், பழங்கள், வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழுப்பு அரிசி (வெள்ளை அரிசிக்கு பதில்) போன்றவை கொழுப்பு இல்லாத உணவாகும் என்று அவர் தெரிவித்தார். அவர் சிறிதளவு உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார். காலையில் எழுந்ததும், குவளை வெந்நீரில் சில துளி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பாராம். இது அவரின் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவியதாக கூறுகிறார்.

2 கரீனா கபூர்

கரீனா கபூர் பிரசவக்காலத்தில் ஏற்பட்ட உடல் எடையை குறைக்க, தற்போதும் முயற்சித்து வருகிறார். அவர் உடல் எடை குறைப்பு முயற்சிகளை நேர்மறையான எண்ணங்களுடன் கையாள்கிறார். இவர் ஒரு வாரத்தில் பல முறை உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வது, தினமும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கிறார்.

3 ஷில்பா ஷெட்டி

இவர் கர்ப்பகாலம் மற்றும் சாதாரண நாட்களிலும் கட்சிதமான உடல் அமைப்பை கொண்டிருக்கிறார். பிரசவத்திற்கு பின், ஷில்பா, துரித உணவை தவிர்த்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவித்தார். உடலில் உள்ள கொழுப்பை சமநிலையில் வைத்திருக்க, அவரது உணவில் மட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொண்டதாக கூறி உள்ளார். அவர் தினமும் யோகாசனங்களை செய்து, மூன்றரை மாதத்தில் 21 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.

4 கஜோல்

கஜோல் தனது இரண்டாவது குழந்தையை பிரசவித்த பின், கர்ப்பகாலம் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்பட்ட எடையை குறைக்க முடிவு செய்தார். உடலில் உள்ள முக்கிய தசைகள் மற்றும் கொழுப்பு பகுதிகளை குறைக்க அவரது பயிற்சியாளருடன் பணிபுரிந்தார். அவரது உடற்பயிற்சி முறையில் யோகா, லிஃப்ட் மற்றும் குந்துகைகள் அடங்கும். அவர் சாப்பாட்டில் சரிவிகித உணவில் அதிக கவனம் செலுத்துவார். அவரது உணவில் மீன், முட்டை, பன்னீர், நட்ஸ், நாட்டுக்கோழி மற்றும் பால் ஆகியவை அடங்கும். இந்த உணவுகள் அனைத்துமே ஐந்து மாதங்களில் 18 கிலோ எடை இழக்க உதவியதாக கூறுகிறார்.

5 லாரா தத்தா

இந்த அழகிய அம்மா கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது எடையை கட்டுப்படுத்தியுள்ளார். வாரத்தில் 5 நாட்கள் தினமும் உடற்பயிற்சி செய்கிறார். அது மட்டுமின்றி கடுமையான உணவுக்கட்டுப்பாடும் ஒரு காரணம் ஆகும். அவை, பழங்கள், நட்ஸ், பழச்சாறு மற்றும் முட்டை. காபி குடிப்பதை நிறுத்திவிட்டு காய்கறிகளையே விரும்பி உண்கிறார். மேலும் யோகாசனங்கள் இவரின் அழகை மெருகூட்டுகின்றது.

6 மலைக்கா அரோரா கான்

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர் எல்லா உணவுகளையும் சாப்பிடுவார். ஆனால் மிதமான அளவில் மட்டுமே உண்ணுவார். இவருடைய உணவுக்கட்டுப்பாடு 5 சத்தான உணவுகளை உள்ளடக்கியது. 20 நிமிட கார்டியோ மற்றும் கிக்பாக்ஸிங் இவரது தினசரி உடற்பயிற்சியாகும். ஆனால் சிலசமயம் நீச்சலுக்காக இவற்றை செய்யாமல் விட்டுவிடுவார். இது போன்ற சிறந்த பயிற்சிகளால்தான் இவர் பிரசவத்திற்கு முன்னிருந்தது போன்ற கவர்ச்சியான உடலமைப்பையே இப்போதும் கொண்டுள்ளார்.

எதுவாயினும், அம்மாவாக இருப்பது அனைவர்க்கும் இருக்கும் ஒரு அலாதியான இன்பமாகும். பிரசவத்திற்கு பின் கூடிய எடையை குறைக்க முயன்று விரைவாக குறைக்க முடியவில்லையென்று வருத்தப்படாதீர்கள். தொடர்ச்சியான உடற்பயிற்சியின் மூலமாக சிறிது தாமதமானாலும் உங்கள் எடையை குறைக்கலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon