Link copied!
Sign in / Sign up
2
Shares

பிரசவத்திற்கு பின் உங்களுக்கு ஏற்படும் 6 அனுபவங்கள்

கர்ப்பகாலம் என்பது குழந்தைகள், அளவில்லாத அன்பு என பல விஷயங்களை கொண்டிருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்ல மாட்டார்கள். பிரசவத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய்யை போல் இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. உங்களின் புதிய, குழந்தையில்லா உடம்பை பழகிக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும். மேலும், இது வலி நிறைந்ததாகவும் இருக்கும். என்ன வலிகள் என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்காக...

1 உடல் வலி

குழந்தையை பெற்றெடுத்த பின், நீங்கள் குத்துசண்டை போட்டியில் பங்கேற்றது போல் உணர்வீர்கள். உங்களின் விலா எலும்புகள், வயிறு, முதுகு என அனைத்தும் வலி எடுக்கும். குறிப்பாக நீங்கள் வலி நிவாரணிகளை எடுத்திருந்தால், நீங்கள் உடல் வலியுடனும் சோர்வாகவும் காணப்படுவீர்கள். இது சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். வேண்டுமானால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம்.

2 தசை பிடிப்பு

உங்களின் கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் போது, அதன் இயல்பான அளவை விட அதிகரிப்பதால், குழந்தை பிறந்த பின்பு அதை பழைய நிலைக்கு கொண்டு வரும் போது தசை பிடிப்புகள் ஏற்படும்.

3 மார்பகங்கள்

உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகும். இதை நீங்கள் பழகிக்கொண்டு தான் ஆகவேண்டும். உங்கள் குழந்தை தாய்ப்பாலை நன்றாக குடிக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மார்பில் வலி எடுத்தால் ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

4 இரத்தப்போக்கு

இது சில நாட்களுக்கு மட்டும் தான். இரத்தப்போக்கு பிரசவ நேரத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று நீங்கள் எண்ணியிருந்தால் அது தவறு. சில சமயம், பிரசவம் முடிந்த 4 வாரங்களுக்கு கூட இரத்தப்போக்கு ஏற்படலாம். எனவே, சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துங்கள்.

5 வியர்வை

எல்லா பருவங்களிலும் இரவு நேரங்களில் உங்கள் உடல் சூடாவதை போல் உணர்வீர்கள். இரவு நேரங்களில் வியர்ப்பது சகஜம் என்றாலும், இது உங்கள் உடலின் ஹார்மோன்களை சீராக்க நடைபெறும் ஒன்றாகும். பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடலில் தேவையற்ற நீர் அதிகளவில் இருக்கும் என்பதால் அவையெல்லாம் வெளியேற சிறிது காலமாகும்

6 மலசிக்கல்

உங்கள் குடல் இயக்கங்கள் கடினமாக இருக்கும். இது உளவியலாக அல்லது உடல் உறுப்புகளை மறுசீரமைக்கும் நடைமுறையாக இருக்கலாம். நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

பிரசவத்தையே கடந்துவிட்டீர்கள். இதெல்லாம் உங்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்று.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon