Link copied!
Sign in / Sign up
0
Shares

பிரசவத்திற்கு பின் முடி உதிர்வை தடுக்கும் 5 சீப்புகள்


கர்ப்பகாலத்தில் முடிஉதிர்வு குறைவாக இருக்கும். ஆனால், பிரசவத்தின் பின் அதிகமான முடி உதிர்வு ஏற்படும். பிரசவத்திற்கு பின் இது சாதாரண ஒன்று தான். உங்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் பழைய நிலைக்கு திரும்புவதன் விளைவாக உங்களுக்கு இந்த முடி உதிர்வு ஏற்படுகிறது. இதற்காக கவலைப்பட தேவையில்லை. இவையெல்லாம் கர்ப்பகாலத்தில் உங்களுக்கு வளர்ந்த அதிகமான முடிகளே. இந்த ஹார்மோன்கள் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பிவிட்டால், மீண்டும் முடி வளர ஆரம்பித்துவிடும். எனவே, பிரசவத்திற்கு பிறகு உங்கள் முடியை நன்றாக பராமரியுங்கள். இங்கே, பிரசவத்திற்கு பிறகு உங்கள் முடியை பராமரிக்க உதவும் சிறந்த சீப்புகளை பற்றி பார்க்கலாம்.

1 மர சீப்பு

அதிக முடி உதிர்வை சந்திக்கும் தாய்மார்கள், மரத்தால் செய்த, அகலமான பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்கலாம். மரம் உங்கள் முடிகளில் ஏற்படும் உராய்வை குறைப்பதால், முடியை வேரில் வலுவாக வைத்திருக்கும். மேலும், அகலமான பற்கள், சிக்கல்களை எளிதாக எடுக்கும் என்பதால் முடி உதிர்வு குறையும். பொதுவாக அனைத்து பெண்களும் இந்த சீப்பை பயன்படுத்தலாம்.

2 சிக்கு எடுக்கும் சீப்பு

மிக அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் பெண்களுக்கு இது கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்லலாம். மென்மையான முடியை சிக்கெடுக்கும் போது அதிகமாக முடி உதிர்வு ஏற்படும். இது எளிதாக சிக்கெடுக்க உதவுவதோடு, தலைக்கு மசாஜையும் கொடுக்கிறது.

3 மசாஜ் சீப்பு

இந்த சீப்பில் வடிவமைக்கப்ட்டுள்ள அதிர்வுறும் தூரிகைகள், உங்கள் தலைமுடிக்கு தேவையான மசாஜை வீட்டிலேயே அளிக்கிறது. நீங்கள் எப்போதெல்லாம் விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் இந்த சீப்பை பயன்படுத்தலாம். இது முடியின் வேர்களில் மசாஜ் செய்வதால், முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதை பயன்படுத்திய பிறகு கண்டிப்பாக உங்கள் கூந்தல் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

4 எண்ணெய் தடவும் சீப்பு

இந்த சீப்பில் ஒரு எண்ணெய் பாட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணெய் உங்களின் பாதிக்கப்பட்ட முடிகளுக்கு ஏற்ற ஆயுர்வேத சிகிச்சையாகும். இது தலையில் சமமாக படர்வதால், உங்களின் முடியால் எளிதாக இது உறிஞ்சப்படும். அகலமான பற்கள் எளிதாக சிக்கெடுக்க உதவுவதோடு, முடி உதிர்வை குறைக்கிறது.

5 மென்மையான சீப்பு

இது மென்மையான தூரிகைகளை கொண்டுள்ளதால், தலையில் இருந்து நுனி வரை சீவும் போது முடி உடைவதை தடுக்கிறது. உங்கள் தலைக்கும் முடிக்கும் இந்த சீப்பு மிகவும் மென்மையானதாக இருக்கும். மேலும், பிரசவத்திற்கு பிறகும் முடியின் மிளிரும் தன்மையை தக்கவைக்க உதவும். பொதுவாக சீப்புகள் முடியை வறட்சிக்குள்ளாக்கும். ஆனால் இந்த சீப்போ முடியை மெதுவாக மசாஜ் செய்வதால் முடியில் உள்ள எண்ணெய்ப்பசையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon