Link copied!
Sign in / Sign up
7
Shares

பிரசவத்தின் பின் உடலுறவிற்கு தாயாராக உதவும் 6 உணவுகள்..!

குழந்தை பிறந்த பின், உங்கள் பொறுப்புகள் அதிக அளவில் அதிகரித்திருக்கும். இவையே உங்கள் பொறுப்புகளில் முன்னுரிமை பெற்றிருக்கும். நீங்கள் எப்போதுமே உங்கள் குழந்தையுடனே நேரம் செலவிடுவீர்கள். இப்போது குழந்தையை தவிர யாரைப் பற்றிய சிந்தனையும் உங்களுக்கு இருக்காது. உங்களது முழு கவனமும் குழந்தை சுற்றியே இருக்கும். இதனால் நீங்கள் கணவர் மற்றும் அவர்களை பற்றிய பொறுப்புகளை மறந்திருப்பீர்கள். இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்வு பற்றிய பகுதியிலிருந்து விலகி இருப்பீர்கள். உடல் நிலையும் உங்கள் தாம்பத்திய வாழ்விற்கு தடையாய் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலுறவில் ஈடுபட உதவக் கூடிய 7 உணவுகளை இங்கு பார்க்கலாம்.

1 பெர்ரி

உங்களுக்கு தெரியுமா? பெர்ரி கவர்ச்சியை தூண்டக் கூடிய பழங்களுள் ஒன்று. இது உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது ஆண் மற்றும் பெண் என இருபாலரும் ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட உதவுகிறது. இந்த பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பி உள்ளதால், தமனி மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகிறது. இதில் அதிக அளவில் நிரம்பி இருக்கும் வைட்டமின் சி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது உங்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகரிக்கிறது.

2 சாக்லேட்

சாக்லேட் எப்போதும் பெண்களை மகிழ்ச்சியடைய செய்யக் கூடியது. எனவே பெண்களுக்கு சாக்லேட், கொடுப்பது உங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தும். இது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதனால் அவர்களுக்கு உடலுறவின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்தை குறைக்கவும், உங்களை ஓய்வாகவும் உணரச் செய்யும். இது உங்கள் துணையுடன் படுக்கையில் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்தும்.

3 தர்ப்பூசணி

இது லிகோபீன் மற்றும் சிட்ருல்லைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உடலில் சில வினைகள் புரிந்து அமினோ அமிலத்தின் ஒரு வகையான இன்சுலின் ஊக்கப் புரதமாக மாற்றுகிறது. இது இரத்த நாளங்களை நிதானப்படுத்தி, அதிக அளவில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் தன்மை வயாகராவின் தன்மையை ஒத்திருப்பதால், இதை இயற்கை வயாகரா என்றே சொல்லலாம். இது நேரத்தை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல், உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

4 தக்காளி

இதுவும் தர்பூசணியை போன்றதே. இதில் நிறைந்திருக்கும் லிகோபீன் உங்களுக்கு வயாகராவிற்கு இணையான பயனை கொடுக்கும். இது எளிதில் கிடைக்க கூடிய உணவு பொருளும் கூட. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில் இரத்தக் குழாய்களை பிரிக்கவும் செய்கிறது. இதனால் வெளிவரும் இரத்தமானது, மீண்டும் உட்செலுத்தப்படுகிறது. இது உங்கள் காம உணர்ச்சியை தூண்டக்கூடியது.

5 பாதம்

உங்கள் ஆரோக்கியமான உடலுறவிற்கு தேவையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்களான ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்றவை இதில் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ இதய ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்தவும், செலினியம் கருவுறாமை பிரச்சினையை குணப்படுத்தவும் மற்றும் துத்தநாகம் ஆண்களின் பாலுணர்வை தூண்டக் கூடிய ஹார்மோனேனை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

மேலும் பாதாமில் ஒமேகா -3 கொழுப்பு நிறைந்திருப்பதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடலின் நல்ல இரத்த ஓட்டமானது, ஆரோக்கியமான உடலுறவிற்கு தேவையான ஒன்றாகும்.

6 இஞ்சி

இஞ்சி குமட்டலை சரி செய்ய கூடியது என்பது நாம் அறிந்ததே. அதே போல் இஞ்சி ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்விற்கு உதவுகிறது. இஞ்சி பல அற்புதங்களை செய்ய கூடியது என்பது, நாம் அறியாத ஒன்றே.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon