Link copied!
Sign in / Sign up
53
Shares

பிரசவத்தின் பின் உடலில் ஏற்படும் 7 மாற்றங்கள்

பிரசவம் என்பது அழகான மற்றும் அற்புதமான ஒன்று. நீங்கள் 10 மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த உங்கள் செல்வம் இந்த உலகை பார்க்க போகின்ற அழகிய தருணம். அதெற்கென சில கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வகுப்புகள் கூட இப்போதெல்லாம் நடத்தப்படுகின்றன. அதற்கு சென்று பயிற்சி எடுக்கும் கர்ப்பிணிகளும் ஏராளம். ஆனால் பிரசவத்தின் பின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி யாரும் எப்போதும் பேசுவதே கிடையாது. தாய்மையடைந்த பின் பெண்கள் தங்களை மறந்து தாய்மை உலகில் மூழ்கி விடுகிறார்கள். அவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வதால் தங்களை பற்றி மறந்து விடுகிறார்கள். அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை மறந்து விடுகிறார்கள். இங்கு பிரசவத்தின் பின் ஏற்படும் 7 மாற்றங்களை பற்றி பார்க்கலாம்.

1 இரத்தப்போக்கு

மிகவும் கடுமையான வலியுடன் கூடிய இரத்தப்போக்கை குழந்தை பிறந்தவுடன் உணர்த்திருப்பீர்கள். நீங்கள் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மகப்பேற்று பட்டைகளை பயன்படுத்துங்கள். ஆரம்பத்தில் இரத்தப்போக்கு சிவப்பு நிறமாகவும், பின் மெதுவாக அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் மாறும். இது பெரும்பாலும் குழந்தை பிறந்த பிறகு 2 முதல் 6 வாரங்களுக்கு தொடரும். குழந்தை பிறந்த பிறகு இது அனைவருக்கும் நடக்க கூடிய ஒன்று தான். அதனால் நீங்கள் கவலையடைய தேவை இல்லை.

2 மலம் கழிக்க சிரமப்படுதல்

கர்ப்பகாலத்தில் சிரமப்பட்டதை விட அதிகமாக இருக்கும். குழந்தை பிறந்த பின் மலம் கழிப்பது என்பது கூட கடினமான ஒன்றாக தான் மாறிப்போயிருக்கும். இது மிகவும் கொடூரமான வலியாக இருக்கும். உடலில் நீர் சத்து குறைவான, மலம் இளக்கிகளை பயன்படுத்தாத தாயின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு கொடூரமான ஒன்றாக இருக்கும். பெரும்பாலான மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் மலம் கழித்த பின் தான், வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறார்கள். இது ஏதும் வலி மற்றும் பிரச்சனை ஏற்படுகிறதா என பரிசோதிக்கிறார்கள்.

3 உங்கள் துணையை வெறுப்பது

உங்கள் கணவர் உங்கள் கர்ப்ப வாரங்களில் மிகவும் ஆதரவாக இருந்த போதிலும், நீங்கள் அவரை எந்த ஒரு காரணமும் இல்லாமல் வெறுப்பீர்கள். இதில் யாருடைய தவறும் இல்லை, குழந்தை பிறந்த பின் ஓய்வில்லாமல் இருப்பதால் காரணமின்றி எரிச்சல் மற்றும் கோபம் போன்றவை ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். அம்மா மட்டுமே குழந்தைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், அவர்களுடைய நேரத்தை முற்றிலுமாக குழந்தை எடுத்து கொள்கிறது. அதை அவர்கள் உண்மை என்று ஒப்புக்கொண்டு உணர்ந்து தான் ஆக வேண்டும்.

4 மன அழுத்தம்

பிரசவத்திற்கு பின் ஹார்மோன்கள் உங்கள் உடல் அமைப்பு முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளும். இது உங்களை மன அழுத்தத்துடனும், சோகமாகவும் உணர செய்யும். இது நீங்கள் இதுவரை கவலைப்படாத சிறிய விஷயங்களுக்கு கூட உங்களை அழ செய்து விடும். உங்களுக்கு பொருத்தமான ஆடை அணிகலன்கள் கிடைக்கவில்லை என்றால் கூட நீங்கள் மிகவும் சோர்ந்து போய்விடுவீர்கள்.

5 வலி

நீங்கள் பிரசவித்த முறையை பொறுத்து, உங்கள் உடல் வலியை உணர்வீர்கள். எனவே, நீங்கள் ஒரு அறுவைசிகிச்சை செய்திருந்தால், அதிக அளவிலான வலியையும், சில வாரங்களுக்கு அசௌகர்யத்தையும் உணர்வீர்கள். ஆனால் நீங்கள் அதிக அளவிலான வலியை உணர்ந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

6 பிறப்புறுப்பு

குழந்தைகளை வெளியே தள்ள முயற்சிக்கும் போது, அது உங்கள் பிறப்புறுப்பில் அதிக அளவில் காயத்தை ஏற்படுத்தும் என பிறப்புறுப்பு பிரசவம் உங்களை அச்சுறுத்தலாம். இவை சரியாக சில காலம் எடுக்கும். அதுவரை நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள், குறிப்பாக நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது.

7 தனிமை

நீங்கள் ஒரு குழந்தையை பெற்றிருப்பதால், இனிமேல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தனியாக இருக்க மாட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் ஏன் இவ்வளவு காலமாக தனிமையை உணர்ந்தீர்கள், அதிலும் குறிப்பாக ஆரம்ப காலங்களில் ஏன் உணர்ந்தீர்கள் என்பதையே, நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் இனி இந்த செயல்களை செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது போன்ற விஷயங்கள், உங்கள் கணவருடன் திரைப்படங்களை பார்த்து மகிழ்வது போன்றவற்றை செய்யுங்கள். மேலும் நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஓய்வெடுங்கள்.

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதை நீங்களாகவே கண்டு பிடிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கஷ்டங்கள் மற்றும் வேதனையை அனுபவித்திருந்தாலும், நீங்கள் உங்கள் குழந்தையை நினைக்கும் போதே, அனைத்தும் மறைத்து விடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon