Link copied!
Sign in / Sign up
4
Shares

பிரசவத்தின் பின் இடுப்பு சதையை கடினமாக்கும் 7 வழிகள்

உங்களின் செல்லக்குழந்தை வீட்டிற்கு வந்தவுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? நீங்கள் பத்திரிக்கைகளில் பார்க்கும் புதிய அம்மாக்களின் தட்டையான வயிறு புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. உங்களின் வயிற்றை சுற்றியிருக்கும் சதைகள் பிரசவத்திற்கு பின் சற்று தளர்வடைந்திருக்கும். ஆனால் இது இயற்கையானதுதான் நீங்கள் பயப்பட தேவையில்லை. இது உங்கள் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கலாம். எனவே அதை குறைக்க முயற்சிப்பீர்கள். அப்படி இயற்கை முறையில் வயிற்றுச்சதையை குறைக்கும் முறைகளை இங்கு பார்க்கலாம்.

1 பாலூட்டுதல்

எவ்வளவு நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் பாலூட்டுங்கள். தாய்ப்பால் தரும் அம்மாக்கள் தாய்ப்பால் தராத அம்மாக்களை விட அதிக கலோரிகளை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் எடை குறையும்போது உங்கள் சருமம் பழைய நிலையை மீண்டும் அடையும்.

2 தளர்ந்த தோலை நீக்குதல்

உங்கள் வயிறை சுற்றியுள்ள தளர்ந்த சருமத்தை ஒரு ஸ்கரபை வைத்து நீக்குங்கள். இதனை உங்கள் விரல்களை வைத்துகூட செய்யலாம் ஆனால் அதிக அழுத்தம் தரக்கூடாது. இது இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதோடு புதிய ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும்.

3 சிரமப்படுத்தி கொள்ளாதீர்கள்

நிறைய புதிய அம்மாக்கள் விரைவான மாற்றத்திறகாக கடுமையான உணவுமுறையை பின்பற்றுவார்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். நீங்கள் அந்த உணவுமுறையை தொடங்கியவுடன் இழந்த எடையை காட்டிலும் அதிக எடையை விரைவில் அடைவீர்கள்.

4 நீர் அருந்துதல்

அதிகளவு தண்ணீர் மற்றும் பழச்சாறு குடிக்கவும். இது சற்று கடினம்தான் ஆனால் இதன் மூலம் நாள் இறுதியில் நீங்கள் அடையப்போகும் நன்மைகள் ஏராளம். இது உங்கள் சருமத்தை கடினமாக்குவதோடு ஒளிரவும் செய்யும்.

5 புரோட்டின்

புரோட்டின்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்திறனைக் கூட்டுவதற்கு அத்தியாவசியமான கொலாஜன் என்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கோழி, முட்டை அல்லது மீன் போன்ற விலங்கு புரதங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு சைவபிரியர் என்றால், பீன்ஸ், பால், மற்றும் இலை காய்கறிகளும் அதே வேலையை செய்கின்றன.

6 ஈரப்பதம்

ஈரப்பதமூட்டும் லோஷன் அல்லது கிரீம் கொண்டு உங்கள் தோலை மசாஜ் செய்வது உங்கள் தோல் மீது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கொலாஜன், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பொருட்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில், தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

7 உடற்பயிற்சி

சில தசை சம்பந்தமான உடற்பயிற்சிகள் உங்கள் உடலில் சிறப்பாக செயல்படுவதோடு நீங்கள் விரும்பும் வடிவத்தையும் தருகிறது. ஆனால் உங்களின் தையல் பிரியும் அளவிற்கு கடினமாக (ஒருவேளை நீங்கள் சிசேரியன் செய்திருந்தால்) செய்யக்கூடாது. மேலும், உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon