Link copied!
Sign in / Sign up
25
Shares

பிரசவத்தின் பின் ஏற்படும் முடி உதிர்வை தவிர்க்க 7 வழிகள்


நீங்கள் உங்கள் குழந்தையை பிரசவித்ததிலிருந்து அதிகமாக முடி உதிர்கிறதா? அது உங்களை மிகவும் கவலையடைய செய்கிறதா? இனி கவலையைவிடுங்கள். பிரசவத்தின் பின் முடி உதிர்வது என்பது மிகவும் சாதரணமான ஒன்று. திடீரென்று ஒரே நாளில் மிக அதிகமாக முடி உதிர்கிறது என்பது உங்களை கவலையடைய செய்தாலும், அதெற்கென சில காரணங்களும் உண்டு. அது எதனால் என்பதை பார்ப்போம். 

கர்ப்பத்திற்கு முன், ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக நாளொன்றுக்கு 70-100 முடியை இழக்கிறார்கள். இப்போது, அவர்கள் கருவுற்றிருக்கும் போது, அவர்களது உடலின் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, முடி உதிர்வை குறிக்கும். இது நடைமுறையில் இருக்க கூடிய ஒன்று. கர்ப்பகாலத்தில் உங்கள் முடி அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருந்திருக்கும் என்பதை கவனித்திருக்கிறீர்களா? கர்ப்பகாலம் முழுவதும் இப்படி இருப்பதால், உங்களுக்கு முடி உதிர்வு குறையும்.

நீங்கள் குழந்தையை பிரசவித்த பின், எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி முடி உதிர துவங்கும். உங்கள் கர்ப்பகாலத்தில் அதை தடுத்து கொண்டிருந்த ஈஸ்ட்ரோஜன் குறைவதால் தான் இது ஏற்படுகிறது. இதுவரை விழாமல் இருந்த முடிகளும் சேர்த்து விழுகிறது. இதன் பின் உங்கள் முடி உதிர்வு பழைய நிலைக்கு திரும்புகிறது. பிரசவத்தின் முன் உங்கள் முடி எப்படி இருந்ததோ, அதே நிலைக்கு திரும்பும். முடிந்தவரை முடி உதிர்வை தவிர்க்க இந்த முறைகளை முயற்சியுங்கள்.

1 அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வது

கடுகு மற்றும் வேப்பம் போன்ற எண்ணெய்கள் முடி உதிர்தலைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடுகு மற்றும் வேப்ப எண்ணெயை கொண்டு உங்கள் மயிர்க்கால்களில், ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை 20 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு மறுநாள் காலை ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் மாற்றத்தை காணலாம்.

2 முட்டையின் வெள்ளை கரு

ஆமாம், முடி உதிர்வை குறைக்க மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒரு முட்டையை எடுத்து அதிலிருந்து வெள்ளை கருவை தனியே பிரிக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதில் சில துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தடவில் அரை மணி நேரம் உறவைத்து, ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். கடைசியாக கண்டிஷ்னர் உபயோகிக்கவும். இது போல் வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். சில நாட்களில் நடக்கும் மாயத்தை பாருங்களேன்.

3 தண்ணீர்

நீங்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதை விட சிறந்த வழி வேறு ஏதும் இல்லை. நீங்கள் வேறு ஏதும் செய்யாவிட்டாலும், தண்ணீர் குடிப்பது உங்கள் முடி உதிர்வை குறைக்கும். இதை நீங்கள் மற்ற முறைகளுடன் சேர்த்து முயற்சிக்கும் போது, இது ஊக்குவிப்பானாக செயல்பட்டு முடி உதிர்வை குறைத்து நல்ல பலன் தரும். இப்போதிலிருந்து அதிக அளவு தண்ணீர் குடியுங்கள்.

4 நார்சத்து நிறைந்த உணவுகள்

நார்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. பீன்ஸ், பழுப்பு அரிசி, ஆரோக்கியமான கோதுமைப் பொருட்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற உணவுகள், உங்கள் செரிமான அமைப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, முடி உதிர்வை குறைப்பதற்கும் சிறந்தவை.

5 சிகை அலங்காரங்களை தவிர்க்கவும்

சிறிது காலம் உங்கள் முடியை வெப்பத்திலிருந்து தள்ளி வையுங்கள். இயற்கையாக இருக்கவிடுங்கள். அதிக வெப்பம் உங்கள் முடி அமைப்பு அழித்து விடும் மற்றும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது, எனவே நீங்கள் சில மாதங்களுக்கு, அந்த சுருள் அல்லது நெளிவு முடியையை ஏற்படுத்தும் இயந்திரங்களை விட்டு விலகி இருக்க பரிந்துரைக்கிறோம். கண்டிப்பாக இது மாற்றத்தை ஏற்படுத்தும்.

6 மிதமான ஷாம்புவிற்கு மாறுங்கள்

அதிக இரசாயன கலப்பில் உருவான ஷாம்புக்களை தவிர்த்து, சில காலம் இயற்கை முறைக்கு மாறுங்கள். உங்கள் முடிக்கு செயற்கை வர்ணங்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்கள் முடி ஆரோக்கியமாக பல நாட்கள் இருக்கவிடுங்கள். வெகு விரைவில் உங்கள் முடி உதிர்வு குறையும்.

இயற்கையான முறையில் முடி உதிர்வை தவிர்க்க, கொஞ்சம் காத்திருங்கள். ஏற்படும் மாற்றங்களால் மனக்கவலையை போக்கி மகிழ்வுடன் இருங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon