Link copied!
Sign in / Sign up
9
Shares

பிரசவம் நிகழப்போவதைக் குறிக்கும் 6 அறிகுறிகள்..!

பெண்களே! முன்கூட்டியே பிரசவவலி வருவதென்பது உங்களை பயம்கொள்ள செய்யலாம். ஆனால், தற்போது அவை முன்னரே கண்டறியப்படுவதால் கவலைப்பட தேவையில்லை. மேலும் சிறந்தது என்னவென்றால் அந்த வலிக்கான தீர்வுகளும், நிவாரணிகளும் உள்ளது. முன்கூட்டியே வரும் பிரசவ வலி என்பது குறித்த நாளிற்கு 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னரே உங்கள் உடல் தயாராகிறது என்பதாகும். 

இதுபோன்ற வலி ஏற்படுவது பிரசவத்தை சிரமப்படுத்துவதோடு குழந்தைக்கு ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்தது. இப்பொது மருத்துவர்கள் ககுறிப்பிட்ட தேதியில் பிரசவம் நடக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். பிரசவத்தில் உள்ள விதி யாதெனில் குழந்தை அம்மாவின் வயிற்றில் எவ்வளவு நாள் இருக்கிறதோ அவ்வளவு ஆரோக்கியம் பெறுவார்கள். எனவே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது. பிரசவ தேதி நெருங்கும்போது மருத்துவரை அடிக்கடி ஆலோசிக்க வேண்டும்.

முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படும் 6 காரணங்கள்:

1. முதுகுவலி

இந்த வலி என்ன செய்தாலும் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக கீழ்ப்புற முதுகுப்பகுதியில் அதிக வலி இருக்கும்.

2. அந்தரங்க உறுப்பு கசிவு அதிகரித்தல்

முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படும் காலத்தில் பிறப்புறுப்பில் இரத்த கசிவு அதிகமாய் இருக்கும். சிறிய இரத்த கசிவாக இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும், இது நிலைமையை சமாளிக்க உதவும்.

3. அழுத்தம் அதிகரித்தல்

உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள், மற்றும் பிறப்புறுப்பில் வலி ஏற்படும். இது பிரசவ வலி முன்கூட்டியே ஏற்படுவதன் அறிகுறியாகும்.

4. குமட்டல், வாந்தி, மற்றும் பிற காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள்

அம்மாக்களே! நீங்கள் சிறிது காய்ச்சல் அடிப்பது போல் உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அறிகுறிகள் குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியாகாவும் இருக்கலாம். திரவ உணவுகளை 8 மணி நேரத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தாலும் மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்.

5. சுருக்கங்கள்

ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் இடைவெளியில் நீங்கள் சுருக்கங்களை அனுபவித்தால், மருத்துவரை நிச்சயமாக தொடர்புகொள்ள வேண்டும்.

6. பிடிப்புகள்

அம்மாக்களே, நீங்கள் உங்கள் அடிவயிற்றில் மாதவிடாய் போன்ற பிடிப்புகளை உணர்ந்தால், இது முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படுவதற்கான உறுதியான அறிகுறியாகும். எனவே, அவர்களை டாக்டரிடம் புகார் செய்யுங்கள்.

முன்கூட்டியே பிரசவ வலிக்கான தீர்வுகள்

1. சுருக்கங்களைச் சோதிக்கவும், முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படுமா என்பதைப் புரிந்து கொள்வதில் இது ஒரு முக்கிய கருவியாகும். உங்கள் விரல் நுனியின் மீது விரல் வைக்கவும், உங்கள் கருப்பை இறுக்கமாவதை உணர முடிந்தால், அது ஒரு சுருக்கம் ஆகும். மேலும், சுருக்கங்களின் காலத்தைக் குறிப்பிடுவது முக்கியம். அவை நடப்பதை தடுக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது முக்கியம். தொடர்ச்சியாக நகருங்கள், அல்லது ஓய்வெடுங்கள் ஒரே நிலையில் எப்போதும் இருக்காதீர்கள். இது பொதுவாக சுருக்கங்களை தடுக்கும் வழிமுறையாகும். அறிகுறிகள் மோசமாகும்போதும் தொடர்ச்சியாக சுருக்கங்களை உணரும்போதும் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியமாகும்.

2. நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தையும் வகைப்படுத்தியும், தயாராகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும். கருத்தரிப்பு ஆரம்பத்தில் இருந்து உங்களுக்குத் தெரிந்த ஒரு டாக்டரை நீங்கள் அடிக்கடி சந்தித்தால், அது நடைமுறை எளிமையாக்கப்பட்டு உங்கள் அனுபவம் மென்மையாக்கப்படும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon