Link copied!
Sign in / Sign up
17
Shares

பிரசவம் குறித்து உண்மையாகும், அதிர்ச்சியான 10 கட்டுக்கதைகள்..!

 
பெண்கள் பிரசவித்திருக்கும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் என பலரும் பல விதமான குறிப்புகளை அல்லது கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவர். ஆனால், இவ்வாறு கூறப்படும் விஷயங்களில், சில உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த மாதிரியான குறிப்புகள் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு, பேருதவி புரிவதாய் திகழ்கிறது. அவற்றுள் சில உண்மைக் கட்டுக்கதைகளை இங்கு காண்போம்..!
 
1. சுவை மற்றும் விருப்பங்கள்..!!
 
 
"பிரசவித்திருக்கும் போது, தாய் எந்ததெந்த உணவுகளை விரும்பி உண்கிறாரோ அவையே குழந்தைக்கும் பிடித்த உணவாகிறது" - இது பொய் அல்ல; உண்மையே. நீங்கள் உங்களுக்கு பிடிக்காத ஆரோக்கியம் தரும் காய்களை ஒதுக்கி, நொறுக்குத் தீனிகள் மற்றும் உடலுக்கு கேட்டு விளைவிக்கும் பொருட்களை உண்டால், அது குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாய்ப்பால் சுரப்பு ஆகியவற்றை பாதித்து உங்கள் நலனிலும் கேடு விளைவிக்கும். ஆகையால், சத்தான உணவுகளை உட்கொண்டு, குழந்தைக்கும் கருவில் இருக்கும் போதே இவ்வுணவுகளைப் பழக்கப்படுத்துங்கள்...
 
2. கூந்தல் மற்றும் நெஞ்செரிச்சல்..
 
'கர்ப்ப காலத்தில், நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு ஆளாகும் பெண்களின், கருவில் தோன்றி பிறக்கும் சிசு தலைகொள்ளா கேசத்துடனும், நெஞ்செரிச்சல் கொள்ளாத பெண்களின் சிசு, மொட்டைத் தலையுடனும் பிறக்கும்.'
- இந்த கட்டுக்கதை குறித்து நடத்திய ஆய்வில் 85% குழந்தைகள் இவ்வாறே பிறக்கின்றன, என்பது தெளிவாகியுள்ளது.
 
3. சூடான வெந்நீர் குளியல்..!
 
 
"கர்ப்பிணிகள் சூடான வெந்நீரில் குளிக்கக் கூடாது." - இதுவும் உண்மையே! கர்ப்பிணிகள் வெந்நீரில் குளிப்பதால், அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்கும்; இது கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியைப் பாதிக்கும். அதிலும் 12 முதல் வாரங்களுக்கு வெந்நீர் குளியல் கூடவே கூடாது.
 
4. மன அழுத்தம்..
 
 
'மன அழுத்தமுள்ள பெண்கள் பிறவிக்க இயலாது' - இது உண்மையே! ஏனெனில், பிரசவ செயலைத் தூண்டும் ஹார்மோன்களின் உருவாக்கத்தை, பெண்களின் மன அழுத்தம் குறைத்துவிடும்; இதனால் கருவுற்றிருக்க இயலாது. மீறி கரு உருவானாலும், கருவால் தாயின் எண்ண ஓட்டங்களை கிரகிக்க இயலும்; இது குழந்தையின் வளச்சியைப் பாதிக்கும்.
 
5. சாக்லேட்..!
 
 
"கர்ப்பிணிகள் சாக்லேட் சாப்பிடுவது நல்லது." - இது மிகச்சரி. கர்ப்ப காலத்தில் சாக்லேட் உண்பதால், 'முன்சூல்வலிப்பு' (preeclampsia) எனும் வலிப்பு நோயைத் தடுக்கும். பொதுவாகவே, சாக்லேட் உட்கொள்ளும் போது, அது நம் உணர்ச்சிகளை மேலெழும்பும், ஆகையால் சாக்லெட்டை அளவாக, கர்ப்பிணிகள் உண்பது நல்லது.
 
6. ஜிம் மற்றும் உடற்பயிற்சி..
 
 
'கர்ப்பகாலத்தில், அதிகப்படியான உடற்பயிற்சி மற்றும் ஜிம்மிற்கு செல்லுதல், குழந்தைக்கு மிகவும் கெடுதல்.' - ஏனெனில் அதிகப்படியான உடற்பயிற்சிகளை செய்யும் பொழுது, அது குழந்தையின் இதயத்துடிப்பை குறைக்கிறது மற்றும் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. எனவே, கர்ப்பிணிகளே! நடைப்பயிற்சி மற்றும் லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
 
7. இறுதி ஊர்வலம் மற்றும் நோயாளி இல்லங்கள்...
 
"இறுதி ஊர்வலம் மற்றும் நோயாளி இல்லங்களுக்கு, கர்ப்பிணிகள் செல்லக் கூடாது." - ஏனெனில், அந்த இடங்களில் இருக்கும் தொற்று நோய்க்கிருமிகள் அல்லது இறுதி ஊர்வலத்தின் வருத்தங்கள், கர்ப்பிணிகளின் மனம் மற்றும் உடல் நலனை பாதித்து விடக்கூடாது என்பதே, இக்கூற்றின் சாராம்சம்.
 
8. மறதி..!
 
'கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகளுக்கு அதிகம் மறதி ஏற்படும்.' - இது உண்மையே! கர்ப்ப காலத்தில், பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மறதிக்கு வழிவகுக்கின்றன. இதை 'momnesia' அல்லது 'pregnancy brain' என்று கூறுவார்கள்.
 
9. சுற்றுச்சூழல்...
 
 
"கர்ப்பிணிகளுக்கு சுற்றுச்சூழலோடு சொந்தம் உண்டு." - ஏனெனில் வானிலையில் ஏற்படும் மாறுதல்கள், கர்ப்பிணிகளின் உடலில் பிரதிபலிக்க வாய்ப்பு அதிகம். வானிலையின், பாரோமெட்ரிக் அழுத்தம் மாறுதல் அடைந்தால், கர்ப்பிணிகளின் பேறு காலத்தில் மாறுதல் நிகழும்.
 
10. காஃபி..!
 
 
'கர்ப்ப காலத்தில், காஃபி அதிகம் பருக கூடாது.' - ஏனெனில், காஃபியில் உள்ள காஃபின், கர்ப்பிணிகளின் உடற்செயலியலில் தாமதத்தை ஏற்படுத்தும்; இதனால், கர்ப்பிணிகளின் உடலில் காஃபினின் செரிமானம் தாமதப்படும். ஆகையால் ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் அல்லது அதற்கும் குறைவான காஃபி அருந்துவது நல்லது.
 
எல்லாக் கட்டுக்கதைகளும் உண்மையல்ல, இதுமாதிரியான சிலவே உண்மை. எடுத்துக்காட்டாக, 'கர்ப்பிணிகள் கடல் உணவு உட்கொள்ளக்கூடாது' என்பர். இது பாதி உண்மை பாதி பொய். சில மீன்கள் கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல; ஆனால் அதே சமயம் ஒமேகா 3 அமிலங்கள் சில வகை மீன்களிலேயே உள்ளன. அவை கர்ப்பிணிகளுக்கும் கருவிற்கும் மிக நல்லது. காதால் கேட்ட அனைத்தையும் பின்பற்றாது, தீர ஆலோசித்தபின் எதையும் பின்பற்றுவது நல்லது. 
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon