Link copied!
Sign in / Sign up
22
Shares

பிரசவகால தொப்பையை குறைக்க உதவும் 5 உணவுகள்

பிரசவகால தொப்பை உங்களுக்கு எப்போதும் பெரிய தொல்லையாக அசௌகரியத்தை ஏற்படுத்தும். நீங்கள் என்ன செய்தாலும் அது உங்களை விட்டு போகாது. தாயாக இருக்கும் உங்களுக்கு இது எளிதான ஒன்றல்ல மற்றும் உங்களுக்காக செலவிட மிகவும் குறைந்த நேரமே கிடைக்கும். மேலும், உங்களால் சரிவர உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருக்கும். ஏனென்றால், உங்களை எப்போதும் உங்கள் அழகிய செல்ல குழந்தை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். நீங்கள் உங்கள் தொப்பையை குறைக்க உடற்பயிற்சிக்கு பதிலாக பயன்தரக் கூடிய வேறு வழிகளில் உங்கள் தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம். இங்கு பிரசவ கால தொப்பையை குறைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்க்கலாம்.

1 முழு தானியங்கள்

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக முழு தானியங்களை உணவில் பயன்படுத்துபவர்களின் வயிறு தட்டையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், இந்த முழு தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளும் போது அவை சரியான அளவில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் சாப்பிடுபவரின் வயிற்றை நிரப்புகின்றன.

2 தர்பூசணி

இதில் கிட்டத்தட்ட 82% நீர் அடங்கியுள்ளது. இது வித்தியாசமான வழியில் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது .தர்பூசணி சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது. மேலும், இது பெரும்பாலும் நீர் என்பதால், நீங்கள் எந்த வகையிலும் கொழுப்பை எடுத்து கொள்வதில்லை. தர்பூசணியில் உடலுக்கு தேவையான தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. இது உங்கள் உடல் எடையை கச்சிதமாகவும், உங்களை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகின்றன.

3 அவகோடா (வெண்ணைப்பழம்)

அவகோடா எனப்படும் வெண்ணை பழத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களால், இதை மாய பழம் என்றே அழைக்கலாம். அவகோடாவில் நிறைந்திருக்கும் நார்சத்து உங்களுக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் செய்கிறது மற்றும் இதில் நிறைந்திருக்கும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் வயிற்றில் சேரும் கொழுப்பை எரிக்க உதவுகின்றன. இது உங்களை நீண்ட நேரம் பசி இல்லாமல் மட்டும் வைக்காமல், தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.

4 பீன்ஸ்

தினசரி உணவில் பீன்ஸ் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொழுப்பை சமநிலையில் வைக்க உதவும். மேலும் இது உடல் தசைகள் வளர்ச்சி பெறவும், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இதுவும் உங்கள் பசியை அதிக நேரம் கட்டுப்படுத்துவதால், இது தேவையற்ற நொறுக்குதீனி பழக்கத்தை கட்டுக்குள் வைக்கிறது. பீன்ஸை உங்கள் தினசரி உணவில் சேருங்கள். உங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்றாலும், உங்கள் தொப்பை குறைவதை பார்க்க முடியும்.

5 ஆப்பிள்

அதிக அளவில் நார் சத்துக்கள் நிரம்பி இருக்கிறது ஆப்பிளில். இது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை ஏற்படுத்தாதவாறு உங்கள் வயிற்றை நிரம்ப செய்கிறது. எனவே, அது அதிகப்படியான உணவுகளை தவிர்க்கிறது மற்றும் வயிற்று கொழுப்பை படிப்படியாக குறைக்க உதவுகிறது. மேலும், உங்கள் உடலில் அதிகபட்ச வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை நிரப்புகிறது. எனவே, தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் வயிற்று பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon