Link copied!
Sign in / Sign up
20
Shares

பிரசவ வலி தூண்டப்படுத்தல் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்ப நிறைய வேறுபாடும். கர்ப்பிணிகளுக்கு இடையில் ஒப்பீடு செய்வது வீண். அது தவறாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்பம் மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்தது என்பது ஒரு அசாதாரண உண்மை அல்ல. இதுவும் சாதாரண ஒன்று தான். இது மிகவும் வேதனையான, நீண்ட அல்லது சிக்கலான ஒன்றாகும். மாதவிடாய் சுழற்சி என்பது அனைத்து பெண்ணின் மரபணு செயல்பாடு சார்ந்ததாகும். இவை பழக பழக அதிலிருக்கும் கஷ்டங்களை உணர்ந்து அதிக அனுபவசாலியாகி இருப்பீர்கள். மருத்துவ அறிவியல் முன்னேற்றத்தால், மேலும் சிக்கல்களுக்கான சாத்தியமான தீர்வுகளை சந்தித்து வருகின்றன. எனவே நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சிறிய ஆராய்ச்சி, நீங்கள் தவறாக உணரும் ஒவ்வொரு முறையும் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணர் அல்லது மகப்பேறியல் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். 

சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்களைப் பற்றி பேசுகையில், தாய்மார்கள் இடையில் தொடங்கியுள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்பது மருத்துவ மற்றும் தனிப்பட்ட இரு காரணங்களினால் இயற்கை மற்றும் பிரசவ வலி தூண்டப்படுவதற்கு இடையே தேர்ந்தெடுக்கும் குழப்பம் தான். இங்கு தூண்டப்படும் பிரசவத்திற்கான சில காரணங்களை பார்க்கலாம்.

1 குறித்த தேதியில் குழந்தை பெற்றுக்கொள்ள

ஆம், இந்த உலகில் நடக்காதது என ஏதும் இல்லை. அறிவியல் உங்கள் பிரசவ வலியை தூண்டக்கூடிய செயலை செய்யவும் கண்டுபிடித்திருக்கிறது. உங்கள் குழந்தையை எப்போது பிரசவிக்கலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். ஆனால் இயற்கையான பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது, பிரசவத்தை தூண்ட முடியாது.

2 மருத்துவர் இருக்கமாட்டார்

அதே மருத்துவரின் உதவி கிடைக்கவில்லை என்றால் அது ஒரு பிரச்சனை இல்லை. குறித்த கால அட்டவணையில் உங்கள் குழந்தையை பிரசவிக்க செய்ய உங்கள் மகப்பேற்று மருத்துவரால் முடியும்.

3 கணவர் வெளியூர் செல்கிறார்

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். குடும்பத்தை விட இப்போது வேலை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்த முறையில் குழந்தை பெற தம்பதிகள் தயாராக இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இந்த முறையை தவிர்த்து, இயற்கையான முறையில் குழந்தை பெற்று கொள்வதே சிறந்தது.

பிரசவ வலி தூண்டப்படுவதை பற்றிய மருத்துவ விபரங்கள்

பிரசவ வலி தூண்டப்படுவது என்பது செயற்கையாக செய்யக்கூடிய ஒன்று. உங்கள் பிரசவத்திற்கு என குறித்த தேதியை விட அதிகமாக போகும் போது மட்டுமே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது. அதாவது நீங்கள் கருத்தரித்ததிலிருந்து 40 வாரங்களுக்கு பிறகு உங்கள் குழந்தை பிறப்பிற்கான தேதியை அனுமானிப்பார்கள். உங்கள் குழந்தை முழுமையாக வளர 38 முதல் 40 வாரங்கள் எடுக்கும். நீங்கள் இந்த முறையில் முன்கூட்டியே குழந்தை பெற வேண்டும் என தீர்மானித்தால் அது தவறாகும். உங்கள் குழந்தை முழுமையாய் வளர்ச்சி அடைந்து, இயற்கையாக பிறப்பதே சிறந்தது.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால் இது பரிந்துரைக்கப்படுகிறது, தேவைப்படுவதை விட குழந்தை வளரும் ஆபத்து இருந்தால் தவிர்க்கப்பட முயற்சிக்கலாம். இது மற்ற நோய்களுக்கு வரும் போது இது ஒரு விருப்பமாக முடிவு செய்யலாம். பிரசவ வலி தூண்டப்படுவது என்பது செயற்கை ஆக்ஸிடாஸின்களை வெளியேற்றி, ஹார்மோன்கள் மூலமாக கருப்பையை விரிவடைய செய்து சுருக்கங்களை ஏற்படுத்துவதாகும். இதுவே, இயற்கையான குழந்தை பிறப்பு முறையில், இயற்கை ஆக்ஸிடாஸின்கள் உடலில் தூண்டப்பட்டு, சரியான இடைவெளியில் தொடர்ச்சியான சுருக்கங்கள் ஏற்படும். இந்த சமயத்தில் உங்கள் மூளை எண்டோர்பின்னை வெளிப்படுத்துகிறது. இது இயற்கை வலி நிவாரணியாக உங்களுக்கு வலியை குறைகிறது. ஆனால் தூண்டப்பட்ட பிரசவத்தில் எண்டோர்பின் வெளிப்பாடு இல்லாததால், உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும்.

பிரசவலி தூண்டப்படுவதில் இருக்கும் ஆபத்துகள்

இவை சிசேரியன் செய்யக்கூடிய நிலையை கூட ஏற்படுத்தலாம்.

1 குறை பிரசவம்

2 குறைந்த இதய துடிப்பு

3 நோய்த்தொற்று

4 தொப்புள் கொடி பிரச்சினைகள்

5 பனிக்குடம் உடைதல்

6 பிரசவத்திற்கு பிறகு இரத்தப்போக்கு

பிரசவ வலி தூண்டப்படுவதற்கான வேறு சில வழிகள்.

1 சவ்வு மாற்றியமைத்தல்

இது கருப்பை வாயில் அம்மோனிக் திரவங்களைக் கொண்டிருக்கும் சவ்வை பிரிப்பது. இதன் மூலம் பிரசவ வலி தூண்டப்படுகிறது. இது கொஞ்சம் வலி நிறைந்த மற்றும் நல்ல பலன் தர கூடிய முறையாகும்.

2 புரோஸ்டாகிளாண்டின்

இந்த ஹார்மோன் உங்கள் கர்ப்பகாலத்தில் வயிறு மற்றும் கருப்பையை முதிர்ச்சியடைய செய்து பிரசவ காலத்திற்கு உதவ செய்யும். பிரசவ வலி தூண்டப்படும் செயலில், இது கர்ப்பிணிகளின் அந்தரங்க உறுப்பில் மாத்திரை அல்லது களிம்பாக உள் செலுத்தப்படுகிறது. இது உங்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கலாம் அல்லது நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் இது உங்களை பாதிக்காது. ஆனால் இது உதவுகிறது!

3 வீட்டு மருத்துவம்

உடலுறவு கூட பிரசவத்தை தூண்டுகிறது என்கிறார்கள் சிலர். ஆனால், பனிக்குடம் உடைந்திருந்தால், அது உங்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தலாம். விளக்கெண்ணெய் மற்றும் காரமான உணவு கூட உங்களது பிரசவத்தை தூண்டலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon