Link copied!
Sign in / Sign up
0
Shares

பிறந்து ஏழே நாள் வயதான குழந்தைக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி..!

அலெக்ஸ் மற்றும் மிஸ் ராபர்ட் தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு ஆண் மகவு பிறந்தது. ஆனால் அந்தக்குழந்தை பிறந்தவுடனே அதற்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு, தம்பதியரிடம் தெரிவிக்கப்பட்டது; அதாவது மருத்துவர்கள், மிஸ் ராபர்ட் உங்கள் மகன் 4 கான்ஜெனிட்டால் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்; எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை செய்கிறோமா அத்தனை விரைவில் குழந்தைக்கு நல்லது; ஆனால், குழந்தையின் பிழைப்பு வீதம் குறைவே! அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டாலும் குழந்தையின் நிலை கவலைக்கிடமாவே மாறும் வாய்ப்புண்டு என்று தம்பதியரிடம் தெரிவித்தார்.

 

மருத்துவரின் கூற்றைக் கேட்ட தம்பதியர், எப்படியும் குழந்தைக்கு ஏதோ ஒன்று நேரப்போகிறது; ஆகையால் நமக்கு கிடைத்திருக்கும், நம் முன்னிருக்கும் ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி பார்த்துவிடலாம் என்று மனதைக் கல்லாக்கி ஒரு முடிவுக்கு வந்தனர்.

 

 

குழந்தை பிறந்த 6 நாள் முடிவில், ஏழாம் நாள் தொடக்கத்தில் குழந்தைக்கு திறந்த இருதய சிகிச்சை எனும் ஓப்பன் ஹார்ட் சர்ஜரியை குழந்தைக்கு செய்ய முடிவு செய்தனர்; சிகிச்சையும் தொடங்கியது, அதே நேரத்தில் குழந்தையின் தாயின் கண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்தது, தந்தையோ இளகிய இரும்பாய் உருக்குலைத்து போனார். 

 

அறுவை சிகிச்சை முடிந்து தன் குழந்தையை கண்ட போது, தாயின் உள்ளம் நொறுங்கியது; தன் குழந்தையின் நிலை குறித்து தாய் கூறியதாவது, "பிறந்து 7 நாட்களான என் குழந்தை, ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்கு உள்ளாகியது; அதன் சின்னஞ்சிறு உடலில் மயக்க ஊசி, அது இது என பல ஊசிகள் போடப்பட்டு, வயர் மற்றும் டியூப்களால் குழந்தையின் உடல் மறைக்கப்பட்டது; இந்த சிறு வயதிலேயே இசிஜி, ஆஞ்சியோகிராம் என்ற பெரிய பெரிய சிகிச்சைகள் என் குழந்தைக்கு நேர்ந்துவிட்டன. என் குழந்தை அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் நான் தாங்கிக் கொள்ளக்கூடாதா என்று என் இதயம் ஓலமிட்டது..!"

 

மார்புற தழுவி பாலூட்ட வேண்டிய நான், என் குழந்தையை குழாய் வழியாக உண்ணுமாறு செய்துவிட்டேனே என்று என் மனம் வெம்பியது..! 

 

பின் இறைவன் அருளால், அறிவியல் தொழில்நுட்பத்தின் மாயாஜாலத்தால் குழந்தை நலம் பெற்றது; குழந்தையின் தாய் தந்தையும் மறுபிறவி பெற்றனர்..! அவர்கள் வாழ்வின் சோகம் தீர்ந்து, சந்தோஷப் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன.

 

இந்தக்குடும்பம் எல்லாவித நலம் பெற்று, குழந்தை விரைவில் நல்ல பலம் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்கள் மற்றோர் ஆசிபெற பதிப்பினை பரப்புவோமாக..!!

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon